kerala-logo

மகனுடன் ஒர்க் அவுட் செய்யும் சினேகா; வைரல் போட்டோ


நடிகை சினேகா தன்னுடைய மகனுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சினேகா தன்னுடைய மகன் விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக், கம்மெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்தார்.

42 வயதாகும் நடிகை சினேகாவுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும், இப்போதும் பார்க்க இளமையாக இருக்கிறார். அதற்கு காரணம், முறையான டயட், ஒர்க் அவுட்தான் காரணம் என்று சினேகா பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

நடிகை சினேகா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘GOAT’ படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினேகா நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

Join Get ₹99!

. இந்த சூழலில்தான், அவருக்கு ‘GOAT’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்துள்ளார். ஒருவேளை, சினேகா, வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்து இருந்தால் இப்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு, தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், தொலைக்காட்சிகளில் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். அதே போல, அவருடைய ‘சினேகாலையா’ கடைக்கு சென்று அங்கே வரும் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.

சினேகா, பிஸியாக இருந்தாலும், குழந்தைகள் மற்றும் கணவருடனும் தனது நேரத்தை செலவிடுகிறார். அண்மையில், குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்று நடிகை சினேகா, வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர அந்த புகைப்படங்கள் வைரலானது.

சினேகா மிகுந்த காரியம், சகிப்புத்தன்மையும், குடும்பிப்புடனான காப்பாட்டு நேரங்களின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு புகைப்படத்திலும் நிரூபிக்கும் விதமாக வெளிப்படையாக இருக்கிறார். அவரது அதிநவீன உடற்பயிற்சி முறைகளுக்கான மகிழ்ச்சியான விளைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வது அவரது உன்னத அடையாளமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், தற்போது நடிகை சினேகா, தன்னுடைய மகன் விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் அம்மாவுக்கே ஃடப் கொடுக்கும் விதத்தில் விஹான் ஒர்க்கவுட் செய்வதாக மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Kerala Lottery Result
Tops