kerala-logo

எதிர்நீச்சல் சீசன் 2 வருமா? உறுதி செய்த மதுமிதா : வைரல் பதிவு


சமீபத்தில் முடிவடைந்த சின்னத்திரையின் முக்கிய சீரியலான எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகம் வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டரில் முதலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து எதிர்பாராத விதமாக மாரிமுத்து மரணமடைந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்கும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மாரிமுத்துவுக்கு பதிலாக டெரர் வில்லனாக களமிறங்கிய நடிகர் வேல ராமமூர்த்தி, அவரது பாணியில் நடித்து வில்லத்தனத்தை செய்திருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் மாரிமுத்து இல்லாத வெற்றிடம் எதிர்நீச்சலில் தெரிகிறது என்று கூறி வந்தனர். மேலும் சமீப காலமாக கதையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக எதிர்நீச்சல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதன் காரணமாக எதிர்நீச்சல சீரியல் விரைவாக முடிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அன்று முதல் எதிர்நீச்சல் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Join Get ₹99!

. இதில் பலரும் எதிர்நீச்சல் இன்னும் முடிந்துவிடவில்லை. அடுத்து சீசன் 2 தொடங்க உள்ளது என்று கூறி வந்ததால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை மதுமிதா, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது ரசிகைகளின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரசிகர் எதிர்நீச்சல் சீரியல் சீசன் 2 தொடங்க உள்ளது என்ற தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார். இதற்கு மதுமிதா, “இப்போதுவரை 2-ம் பாகம் குறித்து எவ்வித உறுதியான தகவலும் இல்லை” என்று கூறியுள்ளார். அதன்படி, இதன் மூலம் எதிர்நீச்சல் சீரியல் சீசன் 2 குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

நிகழ்ச்சியின் மறுபதிப்பிற்கு ரசிகர்களில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தகர்ப்பானது. ஆனால், இது குறித்து ஆபத்தியான நிகழ்ச்சிகளை முன் வைத்து தலையிட்டான் இருந்ததாக செய்தது இதற்கு முக்கிய பொறுப்புக் கூறுகிறது. ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிடுகின்றனர், மற்றும் எதிர்நீச்சல் சீசனின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Kerala Lottery Result
Tops