kerala-logo

‘மாசத்துல மூணு நாளு…’ சென்சாரில் சிக்கிய வைரமுத்து பாடல்; வரிகளை மாற்றிய பிறகும் பாட்டு செம ஹிட்


சென்சார் போர்டு திரைப்படங்களில் வெட்ட வேண்டிய இடங்களில் வெட்டு போட்டாலும், சில நேரங்களில் தேவையில்லாத இடங்களில்கூட வெட்டு போடும். சில வெட்டு போட வேண்டிய இடங்களில் வெறுமனே கடந்து சென்றுவிடும். அந்த வரிசையில், கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடலில், ‘மாசத்துல மூனு நாளு’ என்ற வரிகள் சென்சாரில் சிக்கியது. அதனால், அந்த பாடல் வரிகளை மாற்றி வெளியிட்ட பிறகும், பாடல் செம ஹிட் ஆனது.

இந்த சுவாரசியமான தகவலை யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவரது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது. இன்றைக்கும் ஏதாவது ஒரு ஊரில் திருவிழாவில் முதல் மரியாதை படத்தின் பாடல்கள் ஒலிக்கத் தவறியதே இல்லை.

‘முதல் மரியாதை’ படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜா – கவிஞர் வைரமுத்து கூட்டணியில் பல புகழ்பெற்ற பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த பாடல்களின் வரிசையில், முதல் மரியாதை படத்தின் பாடல்கள் நிச்சயம் இடம்பெற்றியிருக்கும். இந்த முதல் மரியாதை படத்தில், கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்தான், ‘அந்த நிலாவைத்தான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக’ என்ற பாடல்.

இந்த பாடலில், காதலர்களுக்கு இடையேயான காதல் பேச்சுகளை கவிஞர் வைரமுத்து கவித்துவமாக எழுதியுள்ளார்.

Join Get ₹99!

.

பாடல் வரிகள்:

“அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன் கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன் (2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டிபிடிச்சு முத்தம் குடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

மார்கழி மாசம் பார்த்து மருல குளிராச்சு

ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன் கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன் (2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கூல் வைக்கவா

வேக்கதையும் ஒத்தி வைக்கவா அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா

ஓடிவா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக

அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க

காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு

கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு

போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)”

இந்த பாடலை கவிஞர் வைரமுத்து ஒரு காதல் கவிதையைப் போல அழகான ஒரு உரையாடலாக எழுதியுள்ளார்.

இந்த பாடலில் “ஓடிவா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க” என்ற வரிகளுக்கு பதிலாக, “மாசத்துல மூனு நாளு பொறுக்கணும் பொதுவாக” என்று தான் வெளியானது. ஆனால், இந்த ‘மாசத்துல மூனு நாளு’ வரிகள் பெண்களின் மாதவிலக்கு நாட்களைக் குறிப்பிடுவதாகக் கூறி, சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.இதனால், அந்த வரிகளை, “அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க” என்று மாற்றி வெளியிட்டனர். பாடல் வரிகளை மாற்றினாலும், இந்தப் பாடல் செம சூப்பர் ஹிட் ஆனது.

Kerala Lottery Result
Tops