kerala-logo

4-வது திருமண நாள்: தொடரும் தீராத காதல்; கயல் சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!


கயல் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது, தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், பெங்களூருவில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவனு மேட்டே ஷ்ரவாணி என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சைத்ரா, தமிழில் ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் அறிமுகமானார்.
யாரடி நீ மோகினி சீரியலில் சைத்ரா ரெட்டி நெகடீவ் ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான எனெண்டு ஹெசரிடலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். வில்லியாக நடித்து பிரபலமான சைத்ரா தற்போது நாயகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். கயல் சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
A post shared by Chaitra Latha (@chaitrareddy_official)

சீரியலில் நடிக்க தொடங்கிய சில வருடங்களில் திருமணம் செய்துகொண்ட சைத்ரா ரெட்டி, தற்போது திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் தனது கணவருக்கு வாழ்த்துக்கள் கூறி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைராகி வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala Lottery Result
Tops