நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் உதட்டில் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவருக்கும் இந்து – முஸ்லிம் முறைப்படி நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி கலக்கி வருகிறது.
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில், “ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்” போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் பிரபலங்கள் பலரும் பங்கேற்க இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதம் பிரச்னையாக இல்லை. கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் இருவருக்கும் இந்து – முஸ்லிம் என இரண்டு மதங்களின் முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது.
கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இத்திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)
இதைத்தொடர்ந்து டிசம்பர் 15-ம் தேதி கிறிஸ்துவ முறைபடி கோவாவில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
#ForTheLoveOfNyke 🤍 pic.twitter.com/DWOoqarM43
கீர்த்தி சுரேஷை அவரது தந்தை சுரேஷ்குமார் மணமேடைக்கு அழைத்து வரும் புகைப்படம் மற்றும் இவர்களின் திருமண பத்திரிக்கையில் இடம் பெற்ற ஓவியத்தைப் போன்று போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
மேலும், திருமணத்திற்கு மணமகன் ஆண்டனி தட்டில் காரில் செம ஸ்டைலாக வரும் புகைப்படம், மேடையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் உதட்டில் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.