தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் திரையுலகிற்கு வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது.
அண்மையில், திரிஷா நடித்த பொன்னியின் செல்வன், லியோ போன்ற திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றன. இது மட்டுமின்றி, அஜித் குமார், டொவினோ தாமஸ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் திரிஷா நடித்து வருகிறார்.
குறிப்பாக, நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படத்திலும், திரிஷா பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த 27-ஆம் தேதி மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்நிலையில், கோவை மருதமலை கோயிலில் நடிகை திரிஷா இன்று (டிச 15) சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு சாமி படம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
நடிகை திரிஷா சாமி தரிசனம் மேற்கொண்ட வீடியோவை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.#Trisha #ActressTrisha pic.twitter.com/nhoQ0w5oOU