kerala-logo

லண்டனில் குடியேறும் விராட் – அனுஷ்கா தம்பதி: உறுதி செய்த கிரிக்கெட் பயிற்சியாளர்!


கிரிக்கெட் மற்றும் பாலிவுட் திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் விராட்கோலி அனுஷ்கா சர்மா தம்பதி விரைவில், லண்டனில் நிரந்தரமாக குடியேற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ள இவர், கடந்த 2017-ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு, வாமிகா மற்றும் அகாய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது இந்திய அணி ஆஸ்திலேியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விரைவில், விராட் அனுஷ்கா தம்பதி லண்டனில் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கிரிக்கெட் போட்டியிலும், அனுஷ்கா சினிமாவிலும் பிஸியாக இருந்தாலும் இவர்கள் இருவருமே அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இருவரும் இணைந்து பல விளம்பர படங்களில் நடித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், விராட் அனுஷ்கா தம்பதி தங்கள் குடும்பத்துடன் லண்டனில், நிரந்தரமாக குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் மூலம் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்ற பின், இந்தியாவில் இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.
அதேபோல், விராட் தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசியபோது, தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும்போது, பொதுவாழ்க்கையில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று கூறியது, அவர் இந்தியாவில் இருந்து வெளியேறுவது உறுதியான தகவல்கள் தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விராட் கோலியின், குழந்தை பருவ பயிற்சியாளர், அனுஷ்கா மற்றும் குழந்தைகளுடன் லண்டனுக்கு செல்ல விராட் எடுத்த முடிவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விராட்டின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, டைனிக் ஜாக்ரனுக்கு அளித்த பேட்டியில், விராட் கோலியும், அவரது குடும்பத்தினரும் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். அவர் கூறினார், விராட் தனது குழந்தைகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால்அவர் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறி அங்கு குடியேறுவார் என்று கூறியுள்ளார்.
தனிப்பட்ட செயல்பாடுகளின் தொடர் பாதிப்பு மற்றும் பொது வாழ்க்கையில் உள்ள சவால்கள் காரணமாக அவர், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த காரணத்திற்காக, அனுஷ்கா மற்றும் விராட் ஆகியோர் தங்கள் குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புவதாகவும், புகைப்படக் கலைஞர்களின் படங்களை எடுப்பதைத் தடுக்கவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதே சமயம் லண்டனில், இந்த ஜோடி ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தைக் கண்டறிந்துள்ளது. விராட் ஒரு நேர்காணலில், அவர் இந்தியாவில் இல்லாத இரண்டு மாதங்களில், தானும் அனுஷ்காவும் மதிப்புமிக்க குடும்ப நேரத்தையும், நிலையான அங்கீகாரம் இல்லாமல் வாழ்க்கையை அனுபவித்ததாகவும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களது விருப்பத்திற்கு தெருக்களில் நடந்து சென்றதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு ஐபிஎல் சீசனின் போது, விராட் கிரிக்கெட்டுக்குப் பிறகு வாழ்க்கைக்கான தனது திட்டங்களைப் பற்றியும் திறந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) உடனான உரையாடலின்போது, அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தவுடன், நீண்ட இடைவெளி எடுத்து சிறிது நேரம் வெளிச்சத்தில் இருந்து மறைந்துவிடுவேன் என்று பகிர்ந்து கொண்டார். அனுஷ்கா மற்றும் விராட் இருவரும் ஒன்றாக வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஜோடி இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் இணை உரிமையாளராக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுஷ்காவும் விராட்டும் லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தங்களுடைய ஓய்வு நேரத்தை அனுபவிப்பதைக் காட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. வேலையில், அனுஷ்கா கடைசியாக 2018 இல் ‘ஜீரோ’ படத்தில் நடித்தார். 2022 இல் அவரது சகோதரர் கர்னேஷ் ஷர்மாவின் ‘காலா’ படத்திலும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

Kerala Lottery Result
Tops