kerala-logo

படம் ஃபுல்லா கருப்பு வெள்ளை: பாடல் மட்டும் கலர்; சிவாஜிக்கு பட்டம் கொடுத்த முதல் திரைப்படம் இதுதான்!


பாரதிராசன் விலகல், என்.எஸ்.கிருஷ்ணன் மரணம், தியாகராஜ பாகவதர் மறுப்பு என பல சோதனைகளை கடந்த சிவாஜி நடித்த ஒரு படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் இந்த படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டபோதும், 3 பாடல்கள் கலரில் எடுக்கப்பட்டது. எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜபாகவதர் நடிப்பில் 1937-ம் ஆண்டு வெளியான படம் அம்பிகாபதி. அப்போது இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில,20 வருடங்கள் கழித்து இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த 1957-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி கணேசன், பானுமதி இணைந்து நடித்திருந்தனர். மேலும், எம்.கே.ராதா, நாகையா, நம்பியார், ராஜசுலோக்சனா, ஏ.கருணாநிதி, டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
1937-ம் ஆண்டு வெளியான அம்பிகாபதி படத்தின் நாயகன், தியாகராஜபாகவதரை இந்த படத்தில் கம்பர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். முதலில் ஒப்புக்கொண்ட அவர், அதன்பிறகு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் எம்.கே.ராதா கம்பர் வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத, ஒப்புக்கொண்ட, பாவேந்தர் பாரதிதாசன், ஒரு கட்டத்தில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக, சக்தி டி.கே.கிருஷ்ணசாமி, சின்ன அண்ணாமலை, ம.லட்சுமணன் ஆகியோர் திரைக்கதை அமைக்க, இயக்குனர் பா.நீலகண்டன், வசனம் எழுதி படத்தை இயக்கியிருந்தார். முதல் பாகத்தில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன் அவரது மனைவி டி.ஏ.மதுரம் ஆகிய இருவருமே இந்த படத்திலும் நடித்திருந்தனர். ஆனால் படம் வெளியாகும் முன்பே என்.எஸ்.கிருஷ்ணன் மரணமடைந்தார். படத்தில் அவரது சிலையை காட்டியிருப்பார்கள்.
அதேபோல் 1937 மற்றும் 1957-ம் ஆண்டு வெளியான இரு அம்பிகாபதி படத்திற்கும், ஜி.ராமநாதன் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்த படம் முதலில் வெளியாகும்போது சிவாஜி கணேசன், பானுமதி தொடர்பான காதல் காட்சிகள் கலரில் திரையிடப்பட்டது. அதன்பிறகு கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டாலும், படத்தில் இடம்பெற்ற 3 பாடல்கள் கலரில் படமாக்கப்பட்டு இருந்தது. படம் முழுவதும் கருப்பு வெள்ளையில் இருந்தாலும், 3 பாடல்கள் மட்டும் வித்தயாசமாக கலரில் படமாக்கியது அந்த காலக்கட்டத்தில் வித்தியாசமான முயற்சியாக இருந்தது.

Kerala Lottery Result
Tops