தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் துபாய் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அவரின் இரு படங்கள் அடுத்தடுத்தடுத்து வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், படங்களில் நடிப்பதை தவிர, துப்பாக்கிச்சுடுதல், பைக்ரைடு செல்லுதல், மற்றும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பது என விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், துபாயில் நடைபெறும், கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு, அஜித் குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித், தனது கார் ரேஸிங் அணியையும் கட்டமைத்தார். தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், கார் ரேஸிங் பந்தையத்திற்கு தாயராகும் வகையில், துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அஜித் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவரது கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
அதே சமயம் அந்த விபத்தை பொருட்படுத்ததாத அஜித், அடுத்த நாளே பயிற்சியில் ஈடுபட்டதாகவும், போட்டிக்கான அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தனது பெர்ராரி காரில், அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அஜித் ரசிகர்களும் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறி வருகின்றனர்.
இதனிடையே தற்போது துபாய் கார் ரேஸ்க்காக தயாராகி வரும் அஜித், அடுத்த 9 மாதங்களுக்கு நடிப்பில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், தற்போது நடித்து வரும் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல் அஜித்தும் தற்காலிகமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.
AK and his fans. I love them un conditionally. pic.twitter.com/XA3pNbhn6S
இதன் மூலம் தமிழ் சினிமாவின் தல மற்றும் தளபதி ஆகிய இருவரும், வெளியிட்டுள்ள அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அஜித் 9 மாதங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், அவரின் இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள விடா முயற்சி திரைப்படம், ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மே 1-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் இருந்து விலகினாலும் அவரின் படங்கள், அடுத்தடுத்து வெளியாக உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஜித், ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும், தனது 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
