kerala-logo

குடும்பஸ்தன் முதல் குஷி கபூர் படம் வரை: இந்த வாரம் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்!


இன்றைய காலக்கட்டத்தில் வாரந்தோறும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக திரையரங்கில் வெளியானபோது பார்க்க முடியாத படங்கள் எப்போது ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று பலரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையும் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது ஒடிடி தளங்களில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஆஹா, சிம்ப்ளி சௌத், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட தள்ஙகளில் படங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு வெப் தொடர்கள், உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரிலீஸ் ஆவது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகியுள்ளது என்பதை பார்ப்போம்.
நெட்ஃபிளக்ஸில் வெளியாகும் படங்கள்:
நடானியன்:
இப்ராஹிம் அலி கான் பாலிவுட்டில் அறிமுகமாகும் இந்த படத்தில் குஷி கபூர் நாயகியாக நடித்துள்ளார். நிதி ஆதாயத்திற்காக ஒரு போலி உறவாகத் தொடங்கி உண்மையான காதலாக உருவாகும் ஒரு கல்லூரி காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, இந்த படம் இன்று முதல் (மார்ச் 7) நெட்ஃபிளக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தண்டேல்:
சாய் பல்லவி, நாக சைதன்யா இணைந்து நடித்த இந்த படம், சர்வதேச கடல் பகுதியில் பிடிபட்ட 22 இந்திய மீனவர்கள் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று (மார்ச் 7) முதல் நெட்ஃபிளக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.ஜீ5- தளத்தில் வெளியாகும் படங்கள்:
துபாஹியா:
கஜ்ராஜ் ராவ் மற்றும் ரேணுகா ஷஹானே ஆகியோர் நடிப்பில், பீகாரை அடிப்படையாக வைத்து திரைக்தை அமைக்கப்பட்ட நகைச்சுவை படம. இந்தத் திரைப்படம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், வரதட்சணை மோதல்கள் மற்றும் தங்க்ள குற்றவாளிகள் அல்ல என்ற பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் ஒரு கிராமத்தைச் சுற்றி வருகிறது. இந்த படம் இன்று முதல் (மார்ச் 7) முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
குடும்பஸ்தான்:
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகரான கே. மணிகண்டன் மற்றும் சான்வே மேகானா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் குடும்பஸ்தன். திடீர் திருமணம், கோபத்தினால் வேலையை பறிகொடுத்த இளைஞன் குடும்பகத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சி தான் இந்த படத்தின் கதை. திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம், இன்று (மார்ச் 7) முதல் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.சோனிலிவ் திரைப்படங்கள்
ரேகசித்ரம்:
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த படம் ரேகசித்ரம். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் காணாமல் போனதன் மர்மத்தை கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு காவல்துறை அதிகாரி அடுத்தடுத்து சந்திக்கும் திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை.  இந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில், ஆசிஃப் அலி நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று (மார்ச் 7) முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தி வாக்கிங் ஆஃப் எ நேஷன்:
ஜாலியன் வாலா பாக் படுகொலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு கோர்ட்ரூம் ட்ராமா திரைப்படமான இந்த படத்தில், தாருக் ரெய்னா மற்றும் சாஹில் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (மார்ச் 7) முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
ஆஹா தமிழ்
ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1:
வினோத் ராஜேந்திரன் இயக்கிய இந்த படம் ஆபத்து வலையில் சிக்கிய இரண்டு நபர்களைப் பின்தொடரும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. இந்த படம் இன்று ( மார்ச் 7) முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது..
குழந்தைகள் முன்னேற்றக் கழகம்:
யோகி பாபு மற்றும் செந்தில் நடிக்கும் ஒரு அரசியல் நையாண்டி, சமூக செய்தியுடன் நகைச்சுவையை கலந்த இந்த திரைப்படத்தை சகுனி இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியிருந்தார். படம் வெளியாகும் முன்பே அவர் மரணமடைந்ததார். இந்த படம் இன்று முதல் (மார்ச் 7) ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
சிம்ப்ளி சௌத்
ஆரகன்:
மர்மம் மற்றும் சாகசத்தை கலக்கும் ஒரு தமிழ் கற்பனை திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை, அருண் கே.ஆர் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மா நன்னா சூப்பர் ஹீரோ:
தெலுங்கு நடிகர் சுதீர் பாபு நடிக்கும் தந்தை-குழந்தை பாசப் பிணைப்பைக் கொண்டாடும் ஒரு மனதைத் தொடும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று முதல் (மார்ச் 7) ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
பராவு:
மலையாளத் திரைப்படமான பராவு இன்று முதல் (மார்ச் 7) ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
பிற குறிப்பிடத்தக்க வெளியீடுகள்
ரீவைண்ட் (லயன்ஸ்கேட் ப்ளே):
காலப் பயணத்தை ஆராயும் ஒரு தெலுங்கு மற்றும் இந்தி அறிவியல் புனைகதை அதிரடி படமாக வெளியான இந்த படமத் இன்று முதல் (மார்ச் 7) ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
நஞ்சன் கண்டதா சரே (மனோரமா மேக்ஸ்):
ஒரு கொலைக்கு சாட்சியாக மாறிய ஒரு டாக்ஸி டிரைவரைப் பற்றிய ஒரு மலையாள த்ரில்லர், திரைப்படம். இந்த படம் மார்ச் 7 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
லைலா (ஆஹா):
விஷ்வக் சென் இரட்டை வேடத்தில் நடித்துள் ஒரு தெலுங்கு அதிரடி நகைச்சுவை படமான இந்த படம் மார்ச் 7 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Kerala Lottery Result
Tops