விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் காதல் விவகாரம் கோபிக்கு தெரியவர, பாக்யா இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியில் இருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .
சீரியலின் நேற்றைய எபிசோட்டில், இனியாவின் காதல் விவகாரத்தை கண்டுபிடித்த கோபி, அதை பாக்யாவிடம் சொல்ல, பாக்யா, அதிர்ச்சியில் இருக்கிறார். அதே சமயம், எழில் இனியாவுக்கு சப்போர்ட் செய்ய, இந்த வயதில் காதல் வருவது சகஜம் தான். ஆனால் அவள் காதலிப்பது, நம்ம வீட்டில் பெருக்கி துடைக்கும் செல்வியின் மகன் ஆகாஷை என்று சொல்ல ஈஸ்வரியும் பாக்யாவும் அதிர்ச்சியடைகின்றனர்.
செல்வியின் மகனை இனியா காதலிப்பதை தெரிந்துகொண்டு, அதிர்ச்சியாகும் ஈஸ்வரி, ஊரில் உனக்கு காதலிக்க வேறு யாரும் கிடைக்கவில்லையா? போயும் போயும் செல்வியின் மகன் தான் கிடைத்தானா என்று இனியாவை அடிக்க மற்றவர்கள் அனைவரும் அவரை தடுத்துவிடுகின்றனர். அதன்பிறகு, வழக்கம்போல் எல்லாத்துக்கும் காரணம் பாக்யா தான். அவன் வீட்டை கவனிக்காமல் ரெஸ்டாரண்ட்டில் இருந்தது தான் இவள் இப்படி ஆகிவிட்டார்.
பசங்க ஆசைப்பட்ட படி கல்யாணம் பண்ணி வைத்தால், எழில் இப்போ ஒரு பெரிய டைரக்டரா இருக்கான். ஆனால் அவனுக்கு ஏற்ற மனைவியா அவள், என்று அமிர்தாவை கேட்க, கோபி அதை விடுங்கம்மா என்று சொல்லிவிடுகிறான். அதன்பிறகு, ஜெனி இனியாவுக்கு சப்போர்ட் செய்ய, அதை பார்த்து ஈஸ்வரி மீண்டும் கோபமாகிறாள். இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்தாலும், அதிர்ச்சியில் இருந்து மீளாத பாக்யா எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், நின்றுகொண்டிருக்கிறாள்.
அந்த நேரத்தில் வழக்கம்போல் வீட்டுக்கு வரும் செல்வி, எனக்கு முன்னாடியே வந்துட்டியா அக்கா என்று கேட்க, வீட்டில் அனைவரும் கோபமாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று யோசிக்கிறாள். இவளை பார்த்த ஈஸ்வரி, இதுக்குதான் நல்லவ மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு இந்த வீட்டில் வந்து போனியா என்று கேட்க, செழியன் என்ன தைரியம் இருந்தால் உங்க பையன் எங்க தங்கச்சியோட பழகுவான் என்று கேட்க, செல்விக்கு அப்போ தான் புரிகிறது.
அடுத்து ஈஸ்வரி இனிமேல் இங்க வராதே என்று சொல்லி வெளியில், அனுப்ப, அழுதுகொண்டே வீட்டுக்கு செல்லும் செல்வி, தனது மகனை அடி வெளுத்து வாங்குகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
