kerala-logo

கமலா கழுத்தை நெரித்த கோபி: ராதிகா கொடுத்த அதிர்ச்சி; ஈஸ்வரி வெளியே வருவாரா?


பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோபியின் மாமியார் கமலா ஈஸ்வரி மீது கொடுத்த புகார் பெரும் புயலை கிளம்பியுள்ள நிலையில், வைலன்ஸ் கேஸ் என்பதால், ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், அம்மா சிறையில் இருப்பதை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் கோபி, இது பற்றி ராதிகாவிடம் கேட்க, ராதிகா அம்மா கமலா வழக்கம்போல் பேசுகிறாள். இதனால் கடுப்பான கோபி அவரின் கழுத்தை பிடித்து நொருக்க செல்கிறான். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு உடைக்கும் கோபி, “நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு, ராதிகாவை மீண்டும் சந்தித்தது தான்” என்று சொல்கிறான். தொடர்ந்து அவளை சந்தித்ததை விட, அவளை திருமணம் செய்துகொண்டது தான் பெரிய தவறு என்று சொல்லிவிட்டு, இதனையடுத்து பேசும் ராதிகா, நானும் உங்களை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இல்லை என்றால், இருவரும் மாறி மாறி தங்கள் திருமணம் தொடர்பான குறைகளை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.

தனது நண்பன் செந்திலிடம் புலம்பும் கோபி, என்னை குழந்தை போல் பார்த்துக்கொண்ட அம்மாவுக்கு இதுவரை நான் பிரச்சனையையே கொடுத்துள்ளேன் என்று சொல்கிறான்.

Join Get ₹99!

. இதனிடையே சிறையில் இருக்கும் ஈஸ்வரி, கோபியின் 2-வது திருமணம், கமலா தன் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என்று கூறியது, கோபி தன்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்னது உள்ளிட்ட பல நிகழ்வுகளை நினைத்து அழுதுகொண்டிருக்கிறாள்.

அதன்பிறகு விசாரிக்க வரும் போலீஸ், ராதிகாவை உங்களுக்கு பிடிக்காது என்று பல கேள்விகளை கேட்க, ராதிகாவை பிடிக்காது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால், கீழே தள்ளி கருவை கலைக்கும் அளவுக்கு நான் மோசமானவள் இல்லை என்று சொல்லுகிறாள்.

இதனால் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைக்காது என்பதால், பாக்யா ஒரு பக்கம், அவரது குடும்பத்தினர் ஒரு பக்கம் என அனைவரும் வேதனையில் அழுது கொண்டிருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கோபி என்ன செய்வார்? ராதிகா இதற்கு என்ன ரியாக்ட் செய்வார் என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kerala Lottery Result
Tops