ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அண்ணா. மிர்ச்சி செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சத்யா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அண்ணன் தங்கைகளின் பாசக் கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
சௌந்தரபாண்டியின் உண்மை முகத்தை கிழித்து, அம்மா சூடாமணி உத்தமி என்பதை சண்முகம் நிரூபித்து காட்டியதை தொடர்ந்து, சீரியல் கதை ரತ்னா கல்யாணத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஞாயிறு (ஆகஸ்ட் 25) மதியம் 1:30 மணிக்கு அண்ணா சீரியலின் இரண்டரை மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் பலர் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்து, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளனர்.
முதலாவதாக, சண்முகமாக நடித்து வரும் செந்தில், சரவணன் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
. அதாவது டபுள் ஆக்ஷனில் அசத்த உள்ளார் செந்தில். இதனை தொடர்ந்து, அயலி வெப் சீரிஸ் மூலமாக பிரபலமாகி, சின்னத்திரையை கலக்க தொடங்கிய காயத்திரி, அப்பத்தாவாக அசத்த வருகிறார். மேலும், சரவணனாக நடிக்க உள்ள செந்திலுக்கு, ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் புகழ் பார்வதி நடிக்க உள்ளார்.
இதுமட்டுமின்று, இன்னும் பலர் சிறப்பு வேடத்தில் நடித்து, ரசிகர்கள் எதிர்பாராத ட்ரீட் கொடுக்க உள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக அண்ணா சண்டே ஸ்பெஷல் எபிசோடு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.