ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து விவாகரத்து கோருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இது ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் முன்னதாக தனது திருமணம் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்ததை அவரது ரசிகர்கள் நினைவு கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: When AR Rahman opened up about marriage with wife Saira Banu: ‘I wanted someone with humility, who won’t give me much trouble’
அதன்படி, O2 இந்தியாவிற்கு நேர்காணல் அளித்த ஏ.ஆர். ரஹ்மான் திருமணம் குறித்த தனது நம்பிக்கை மற்றும் பயத்தை தெரிவித்திருந்தார். “திருமணம் உங்களை மாற்றுகிறது. ஆமாம், உங்களுக்கு தெரியாத மற்றொரு நபருடன் நீங்கள் வாழப் போகிறீர்கள் என்பதை அறிவது உற்சாகமாகவும், பயமாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன். திருமணம் என்பது சரீரத்தை கடந்து ஆன்மிக ரீதியானது என நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
29 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்திற்கு பெண் பார்க்குமாறு, தனது தாயாரிடம் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். சிமி கரேவாலுடனான நேர்காணலின் போது தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். “உண்மையை கூற வேண்டுமானால் திருமணத்திற்காக பெண் தேடுவதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால், அதுவே திருமணத்திற்கு சரியான நேரமென நான் அறிந்து கொண்டேன். எனக்கு 29 வயதான போது, எனக்காக பெண் பார்க்குமாறு என் தாயாரிடம் கூறினேன். குறிப்பாக, எனக்கு அதிகம் தொந்தரவு அளிக்காத பணிவான பெண்னை பார்க்குமாறு நான் கூறினேன்“ என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சாய்ரா பானு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளிடையே விசுவாசத்தை சமநிலைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். “குழந்தைகள் பிறந்த பின்னர் குடும்பத்தின் மீதான முழு விசுவாசமும் பிளவுபடுகிறது. தாய் மற்றும் மனைவி என இந்த நிலை அடைகிறது. பிறகு எப்படி இதையெல்லாம் ஒருங்கிணைத்து, எல்லோரையும் குடும்பமாகப் பார்க்கும் நிலைக்குச் செல்வது? அனைத்து குடும்பங்களிலும் அன்பு இருக்கிறது. அதேபோல் பிரச்சனைகளும் இருக்கிறது. திருமணம் என் முழு உணர்வுகளான இரக்கம், புரிதல், பொறுமை என பல விஷயங்களை விரிவுபடுத்தியது” என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதி தற்போது விவாகரத்து கோரியுள்ளனர்.