kerala-logo

அப்பா கேரக்டர் முன்னே: இயக்குனர் பின்னே: புதிய சீரியலில் அடுத்தடுத்து நடந்த இரு மாற்றம்!


ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய வள்ளியின் வேலன் சீரியலில், சமீபத்தில் அப்பா கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சீரியலின் இயக்குனரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சீரியலில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. இந்த சீரியலில் நாயகியாக நடித்த ஸ்ரோயா – சித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் சீரியலுக்கு பின், சித்து ராஜா ராணி 2 சீரியலிலும், ஸ்ரோயா ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு சீரியலிலும் நடித்து வந்த நிலையில், இந்த இரு சீரியலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது.
சீரியலில் நடித்து தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சித்து – ஸ்ரோயா இருவரும் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார்கள் என்ற என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஜீ தமிழின் வள்ளியின் வேலன் சீரியலில் இவர்கள் இருவருமே இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த சீரியலுக்கான ப்ரமோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கிய வள்ளியின் வேலன் சீரியலுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், சித்து ஸ்ரேயா ஜோடியாக இருப்பதால், இந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நினைத்த சீரியல் குழுவுக்கு ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த சீரியலில் வள்ளியின் அப்பா கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சாக்ஷி சிவா சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
ஆரம்பத்தில் இருந்தே சீரியல் யூனிட்டுக்கும் சாக்ஷி சிவாவுக்கும் இடையே ஒற்றுமை இல்லாததால அவர் விலகியதாகவும், இது குறித்து தனது சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது சாக்ஷி சிவாவுக்கு பதிலாக வேறு நடிகர் ஒருவர் நடித்து அவர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது சீரியலின் இயக்குனர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சீரியலின் முதல் எபிசோட்டில் இருந்து இயக்கி வந்த இயக்குனர் ராஜ்குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரதாப் என்பவர் தற்போது சீரியலை இயக்கி வருகிறார். சீரியல் ஒளிபரப்ப தொடங்கிய சில வாரங்களிலேயே முக்கியமான அப்பா கேரக்டர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சீரியலின் இயக்குனரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த சீரியல் யூனிட்டில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.