kerala-logo

அமரன் தந்த வெற்றி…சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ அதிகாரிகள்


சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரர் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயனை ராணுவ பயிற்சி மையம் கவுரவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
கடந்த தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள officers training academy சிவகார்த்திகேயனை அழைத்து கவுரவித்துள்ளது. இந்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மீதான ரசிகர்களின் பார்வை மாறியுள்ளது.  மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாகவே அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் வாழ்ந்துள்ளார்.  இந்த படம் ரசிகர்கள் மட்டுமின்றி ராணுவ வீரர்களின் மத்தியிலும் பிரபலம் அடைந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ராணுவ பயிற்சி மையம் சார்பில் பாராட்டும் கிடைத்தது பெருமைக்குரிய ஒன்று என்று ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kerala Lottery Result
Tops