பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்த நடிகை மாயா கிருஷ்ணன், தனது புதிய திறமையை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வெயில்வித்தை பயிற்சியை பற்றிய வீடியோ மிகவும் பிரபலமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சின்னத்திரையில், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்பினை பெற்று தற்போது முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் மூலம் பிரபலமானவர் மாயா கிருஷ்ணன்.
தென் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த மாயா, ஏராளமான தியேட்டர் ஷோக்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வளரவைத்துக்கொண்டார். அதன்பிறகு 2015-ம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக மாயா, தொடர்ந்து மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, விக்ரம், லியோ போன்ற பல பிரபல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து ஃபைட்டர் ராஜா என்ற தெலுங்கு படம் வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்ற மாயா, தனக்கான பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகள் மற்றும் ஆற்றலால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார். தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் அவர் பரவலாக அறியப்பட்டார்.
. இவருக்கு ஆதரவும், அதே சமயம் விமர்சனங்களும் சமம்கவையாக வந்த நிலையில், தொகுப்பாளர் கமல்ஹாசன், இவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இறுதியில் அவர், சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்தாலும், 3-வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாயா, தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெயில்வித்தை பயிற்சியில் இருக்கும் வகையில் வெளியிட்ட புகைப்படங்களும், வீடியோவும் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
வில்வித்தை பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாயா, அதன் முக்கிய காரணம் தனது சகோதரிகள் என கூறியுள்ளார். அவருடைய இந்த திறமையை வெளிப்படுத்திய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சக்கைபோடு போட்டுள்ளது. ரசிகர்கள், மாயாவின் திறமையைக் கண்டு இவருக்கு தங்களது பாராட்டுக்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மாயாவின் இந்த புதிய திறமையைப் பற்றி மேலும் விவரிக்கும்போது அவர், “வில்வித்தையை நன்கு கற்றுக்கொள்வதில் என் சகோதரிகள் எனக்கு மிகுந்த உதவியாக இருந்தனர். அவர்கள் என்னை எப்போதும் ஊக்குவித்து வந்தனர். இது எனக்கும் ஒரு புதிய அனுபவமா உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
மாயா வெளியிட்டுள்ள இந்த வீடியோ அவரது மற்றொரு திறமையை வெளிப்படுத்திய நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது பாராட்டுக்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.