kerala-logo

‘இந்த ஒரு விஷயத்தில் எம்.ஜி.ஆர் ஸ்ட்ரிக்ட்; பாட்டு வரிகளை மாற்றாமல் மியூசிக் டைரக்டரையே மாற்றிவிடுவார்!’


தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆருக்கு பல தத்துவ பாடல்களை கொடுத்தவர் கவிஞர் வாலி. இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆர் குறித்து ஒரு தகவலை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிறுவயது முதல் ஒரு நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தடைகளை சந்தித்த அவர், சிறுசிறு வேடங்களில் நடித்து 2-வது நாயகனாக உயர்ந்தார். இதில் ஒரு சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார். அதன்பிறகு ஹீரோவாக அறிமுகமான எம்.ஜி.ஆர் வெற்றிகளை குவித்தார்.
ஒரு கட்டத்தில் தனது திரை வாழ்க்கை இறங்கு முகத்தில் சென்றபோது தானே தயாரிப்பாளர் இயக்குனராக மாறி நாடோடி மன்னன் என்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கண்டு தனது திரை வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொண்டவர் தான் எம்.ஜி.ஆர். சினிமாவில் தனது படங்கள் தொடர்பான முடிவுகளை தானே எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், சினிமாவில் பலகட்ட சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதில் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
அதேபோல் தனது படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எம்.ஜி.ஆர், தத்துவ பாடல்கள் மற்றும் மக்களுக்கு தேவையாக கருத்துக்கள் அமையும் வகையில் பாடல்களை இயற்ற சொல்வது வழக்கம். அந்த வகையில், தொடக்கத்தில், கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு தத்துவ பாடல்களை கொடுத்து வந்தபோது ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதன் பிறகு வாலி எண்ட்ரி ஆகி, எம்.ஜி.ஆருக்கு ஹிட் பாடல்களை கொடுத்தார்.
வாலி – எம்.ஜி.ஆர் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் இன்றும் காலம் கடந்து பொற்றப்படும் நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் இறந்த நாள், உள்ளிட்ட எம்.ஜி.ஆர் தொடர்பான அனைத்து நிகழ்வுகளுக்கு வாலியின் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வாலி இப்படி எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத காரணதம் என்ன என்றால், ஒரு பாடல் எம்.ஜி.ஆரக்கு பிடித்துவிட்டது அதில் இருக்கும் கருத்துக்கள் மக்களுக்கு தேவையானது என்றால் பாடலில் வரிகளை மாற்ற அனுமதிக்கமாட்டார். அந்த வரிகளுக்கு ஏற்றபடி இசையமைக்க வேண்டும் இசையமைப்பாளரிடம் சொல்லிவிடுவார்.

அப்படி இசையமைக்க முடியவில்லை வரிகளை தான் மாற்ற வேண்டும் என்று சொன்னாலும் கூட, இசையமைப்பாளரை மாற்றிவிட்டு, வேறொரு இசையமைப்பாளரை கமிட் செய்வாதே தவிர, பாடலின் வரிகளை மாற்ற அனுமதிக்கமாட்டார்.  ‘கண் போன போக்கிலே கால் போகலாமா’ என்ற பாடலில், சில வரிகள் டியூனில் உட்காரவில்லை மாற்றிவிடலாம் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்ல, அந்த படத்தின் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி சின்னவர் (எம்.ஜி.ஆர்) ஒப்புக்கொள்ளமாட்டார் என்று கூறியுள்ளார்.