kerala-logo

‘என்னை நாயுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டனர்’: நயன்தாரா உடனான காதல் குறித்து விக்னேஷ் சிவன் ஓபன்


நயன்தாராவுக்கும், தனக்குமான காதல் பொதுவெளிக்கு வந்த போது, தான் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
Nayanthara: Beyond the Fairytale என்ற ஆவணப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், நயன்தாராவின், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமாவில் அவரது பயணம் குறித்து விளக்குகிறது. இந்த ஆவணப்படத்தில், நயன்தாராவின் வாழ்க்கைத் துணையும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், தனது மனம் திறந்து பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Vignesh Shivan says he was compared to a dog after making relationship with Nayanthara public: ‘If the beauty chose the beast’

குறிப்பாக, தங்களுக்கு எந்தவொறு விஷயமும் அவ்வளவு எளிதாக கிடைத்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாங்களால் சாதரணமாக உணவகத்திற்கு சென்று சாப்பிட முடியாதது தொடங்கி, திருப்பதியில் திருமணம் செய்ய முடியாதது வரை அனைத்தும் தங்களுக்கு கடினமாக இருந்ததாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்கள் காதல் முதன்முதலாக பொதுவெளியில் தெரியவந்த போது, தன்னை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்ததாக கூறியுள்ளார். குறிப்பாக, நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்கனுன்னு இருந்தா யாராலும் மாற்ற முடியாது என்ற சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளை பதிவிட்டு, தன்னை ட்ரோல் செய்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்தார். ஆனால், வாழ்க்கையே அப்படி தான் எனவும், நடத்துநராக இருந்தவர் சூப்பர்ஸ்டாராக மாறவில்லையா? அதுபோல் தான் வாழ்க்கையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் பணியாற்றிய போது, விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதல் வயப்பட்டனர். தங்களது காதலை அவர்கள் படக்குழுவினரிடமிருந்து ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,  “நானும் ரவுடிதான்” திரைப்படத்தை தனுஷ் தயாரித்ததால், அதிலிருந்து சில காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவது தொடர்பாக, தனுஷுக்கும், நயன்தாராவுக்கும் இடையே மோதல் எழுந்தது. இது குறித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தனுஷ் சார்பாக எந்த விதமான பதில் அறிக்கையும் தெரிவிக்கப்படவில்லை.

Kerala Lottery Result
Tops