kerala-logo

என்னை விட ஜோதிகாவுக்கு 3 மடங்கு சம்பளம் அதிகம்: மும்பைக்கு குடியேறியது பற்றி மனம் திறந்த சூர்யா!


கங்குவா படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா சமீபத்திய ஒரு நேர்காணலில், தனது மனைவி, ஜோதிகாவுடனான காதல் மற்றும் தனது வாழ்க்கையில் அவரது பங்கு என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில், அறிமுகான சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிரகயாக உயர்ந்துள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவுடன் காதலில் விழுந்த நடிகர் சூர்யர், இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.
Read In English: Suriya reveals Jyotika earned 3 times more than him when they married, explains why they shifted to Mumbai: ‘Her family is here’
தற்போது கங்குவா படத்தின் வெளியீடு தொடர்பான பல நேர்காணல்களில் பங்கேற்று வரும் சூர்யா, மஷாபில் இந்தியா (Mashable India) உடனான ஒரு நேர்காணலில், தனது குடும்பம் சமீபத்தில் மும்பைக்கு மாறியது மற்றும், மக்களுக்கு அறிமுகம் இல்லாத தனது குழந்தைகள் பள்ளியில் தன்னை அறிமுகப்படுத்தியது பற்றியும் பேசினார்.
“ஜோதிகா தனது முதல் தமிழ் படத்தில் என்னுடன் பணியாற்றினார், ஹிந்தியில் டோலி சாஜா கே ரக்னாவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது படம் என்னுடன் இருந்தது. அதன் பிறகு, நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம், பரஸ்பர மரியாதை இருந்தது. எனக்கு தமிழ் தெரியும், நான் ஒரு நடிகரின் மகனாக இருந்தாலும் தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருந்தேன், என் வசனங்களை மறந்துவிட்டேன், எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொன்னார்கள்.
என்னுடைய மூன்றாவது அல்லது நான்காவது படத்தில் இந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தது. ஆனால் ஜோதிகாவின் நடிப்பு மற்றும் நெறிமுறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது, என்னை விட அவருக்கு வசனங்கள் நன்றாகத் தெரியும். அதனால் அவர் வெற்றியை நோக்கி நகர்ந்தார். நான் நிலையாள இடத்தை பெற ஐந்து வருடங்கள் ஆனது. என்னை ஒரு ஹீரோ என்று அழைக்கவும், எனக்கென மார்க்கெட்டை உருவாக்கவும் சில வருடங்கள் ஆனது.
காக்கா காக்கா படத்தில், ஜோதிகாவின் சம்பளம் என்னை விட மூன்று மடங்கு அதிகம். அப்போது தான் வாழ்க்கையில் நான் எங்கே இருக்கிறேன் என்பதையும் உணர்ந்தேன். அவர் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க தயாராக இருந்தார், அவரின் விருப்பத்திற்கு அவருடைய பெற்றோரும் ஒப்புக்கொண்டார்கள், நான் என்ன சம்பாதிக்கிறேன், அவள் என்ன சம்பாதிக்கிறாள் என்பதை உணர்ந்தேன்.
A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

நான் என் நிலைமையை உயர்த்த வேண்டும் என்பதை உணர்ந்தேன், நான் ஜோதிகாவுக்கு சமமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குறைந்தபட்சம் அவற்றைப் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.  இறுதியில் அது நடந்தது. மும்பை வீடு, ஜோதிகாவின் குடும்பம் இங்கே இருக்கிறது. எனது பெற்றோரை விட சற்று மூத்த பெற்றோருடன் ஜோதிகா அதிக நேரம் செலவிடுகிறார். ஜோதிகா ஊருக்குப் போனபோது வயது 18, பிறகு 27 வருடங்கள் சென்னையில் என்னுடன் இருந்தார்.
இப்போது அவர், பெற்றோருடன் நேரம் செலவழித்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். குழந்தைகள் IB பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர், இதற்கு சென்னையில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகள் மட்டுமே இருந்தன. அதனால் மும்பையில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தேன்.“நான் பள்ளிக்குச் செல்லும்போது நன்றாக இருக்கிறது, சென்னையிலும் இது நடக்கும், எல்லோரும் உங்களை அடையாளம் காணப் போவதில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

இங்கு பள்ளியில் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும், நிச்சயமாக, அவர்கள் என் தொழிலைப் பற்றிக் கேட்க மாட்டார்கள், நான் சென்னையைச் சேர்ந்த சூரியா என்று சொன்னால் மட்டும்போதும். ஆனால் அவர்களுக்கு நான் ஒரு நடிகன் என்று தெரிந்தால், அதன்பிறகு எங்களுக்குள் நடக்கும் உரையாடல் வேறு மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார்.

Kerala Lottery Result
Tops