இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்த சில மணி நேரத்ங்களில், அவரிடம், பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டேவும் தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்ததால் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறான கருத்துக்ள் பரவி வரும் நிலையில், இது குறித்து அவரது அமீன் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹமான், கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல படங்களுக்கு இசைமைத்துள்ள ஏ,ஆர்.ரஹ்மான், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற தமிழர் என்ற சிறப்பியும் பெற்றுள்ளவர்.
1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கத்திஜா, அமீன் உட்பட 3 பிள்ளைகள் உள்ள நிலையில், நேற்று (நவம்பர் 19) சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு 29 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டே, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக சமூகவலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்திகள் மற்றும் அவதூறாக கருத்துக்கள் பரவத்தொடங்கியுள்ளது. இது குறித்து பிரபலங்கள் பலரும் ஏ.ஆா.ரஹ்மான் கன்னியமானவர் என்று பதிலடி கொடுத்தாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
A post shared by “A.R.Ameen” (@arrameen)
அந்த பதிவில், என் அப்பா ஒரு லெஜண்ட். படைப்புகளால் மட்டுமல்ல, பண்பு, அன்பு மரியாதை, என அனைத்திலும் ஒரு லெஜண்டாக இருக்கிறார். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரவி வருவது வேதனை அளிக்கிறது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசும்போது அதில் உண்மையும் மரியாதையும் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து ஊக்குவிக்காதீர்கள் என்று அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.