kerala-logo

என் பெயர் இல்லனா உங்க படமே ரிலீஸ் ஆகாது: எம்.ஜி.ஆரிடம் சவால் விட்ட வாலி; எந்த படம் தெரியுமா?


எம்.ஜி.ஆர் இயக்கி தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் பாடல் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதுவார் இந்த படத்தில் நீங்கள் இல்லை என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அதை கேட்ட வாலி எம்.ஜி.ஆரிடமே சவால் விட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த படம் நாடோடி மன்னன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், அதை பற்றி கவலைப்படமாமல் படத்தை இயக்கிய முடித்தார். நாடோடி மன்னன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்.ஜி.ஆருக்கு பெரிய லாபத்தை எடுத்து கொடுத்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் மீண்டும் தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இறங்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். முதல்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லதா அடுத்து எம்.ஜி.ஆருடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.
இந்த படத்தின் வேலைகளை தொடங்கிய எம்.ஜி.ஆர் இசையமைப்பாளராக குன்னக்குடி வைத்தியநாதனை கமிட் செய்துள்ளார். இது குறித்து தெரிந்த கவிஞர் வாலி, போடுங்க எப்படி இருக்கிறது பார்ப்போம் என்று கூறியுள்ளார். இந்த படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்தித்த வாலி, என்னணே ஷூட்டிங் பற்றியே பேசிக்கிட்டு இருக்கீங்க, இந்த படத்தில் பாடல் இல்லையா? பாட்டு பற்றி ஒன்றுமே பேசவில்லையே என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் கண்ணதாசன் தான் எழுதுகிறார். இந்த படத்தில் உங்களுக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார். கண்ணதாசன் பாடல்கள் எழுதட்டும் தப்பில்லை. ஆனால் என் பெயர் இல்லை என்றால் உங்கள் படமே வெளியாகாது என்று வாலி கூறியுள்ளார். இதை கேட்டு ஷாக்கான எம்.ஜி.ஆர், ஏன் எப்படி சொல்றீங்க என்று கேட்க, ஆமாம் நீங்கள் வைத்துள்ள டைட்டில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதில் என் பெயர் வாலியை எடுத்துவிட்டால் ‘உலகம் சுற்றும் பன்’ என்று வரும்.
இப்படி ஒரு டைட்டிலை வைத்து எப்படி படத்தை வெளியிட முடியும் என்று வாலி கேட்க, எம்.ஜி.ஆர் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். இதன்பிறகு வாலி இந்த படத்தில் பாடல்கள் எழுதி கண்ணதாசனும் சில பாடல்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடிப்பில் விளம்பரம் இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops