நடிகர் அஜித் நடித்து விரைவில் திரையரங்கில் வெளிவரவுள்ள விடாமுயற்சி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த TN-31BOYS (பாய்ஸ்) என்று பெயர் வைத்து அஜித்தின் தீவிர ரசிகர்களான இளைஞர்கள் சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி நடந்து வந்து, சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர்.
ஐயப்பனே அஜித்! சபரிமலை கோவிலில் பண்ருட்டி ரசிகர்கள் கோஷம் #AjithKumar | #SabarimalaiTemple pic.twitter.com/EMSMBAoAqL
பின்னர் ஐயப்பனே அஜித்தே… அஜித்தே கடவுளே… என்று பேனரில் பதிவு செய்து சபரிமலை கோவிலை சுற்றி கோஷமிட்டு வந்தனர். இதை கண்ட ஐயப்ப பக்தர்கள் நடிகர் அஜித்குமாரை கடவுளாக நேசிக்கும் அந்த இளைஞர்களின் பார்த்து கும்பிடுற சாமி எனக்கூறி விட்டு சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
