kerala-logo

கனத்த இதயத்துடன் பிரிந்துவிட்டோம்: விவாகரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் பேசிஸ்ட் மோஹினி டே!


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவரிடம், பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டேவும் தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹமான், கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல படங்களுக்கு இசைமைத்துள்ள ஏ,ஆர்.ரஹ்மான், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற தமிழர் என்ற சிறப்பியும் பெற்றுள்ளவர்.
1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கத்திஜா, அமீன் உட்பட 3 பிள்ளைகள் உள்ள நிலையில், நேற்று (நவம்பர் 19) சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு 29 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டே, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனத்த இதயத்துடன், மார்க் மற்றும் நானும் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று அறிவிக்கிறோம். இது எங்களுக்கு இடையே பரஸ்பர புரிதலாக உள்ளது. நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கும்போது, நாங்கள் இருவரும் வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களை விரும்புகிறோம் என்றும் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் பிரிந்து செல்வதே சிறந்த வழி என்றும் நாங்கள் இருவரும் முடிவு செய்துள்ளோம்.
மாமோகி (MaMoGi) மற்றும் மோஹினி டே (Mohini Dey) குழுக்கள் உட்பட பல திட்டங்களில் நாங்கள் இன்னும் இணைந்து செயல்படுவோம். நாங்கள் எப்போதும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம், அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. உலகில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே நாம் விரும்பும் பெரிய விஷயம். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து வழிகளிலும் உங்கள் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.
A post shared by Mohini Dey (@dey_bass)
இந்த நேரத்தில் எங்களுக்கு நேர்மறையாக இருப்பதன் மூலமும், எங்கள் தனியுரிமையை மதிப்பதன் மூலமும் நாங்கள் எடுத்த முடிவை மதிக்கவும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kerala Lottery Result
Tops