kerala-logo

காதலர் பெயர் போட்டோவுடன் டி-ஷர்ட் அணிந்து சக நடிகருடன் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்; வைரல் க்ளிக்ஸ்!


சக நடிகர் வருண் தவானுடன் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை ஜான்வி கபூர், தனது காதலர் ஷிகர் பஹாரியாவின் பெயர் மற்றும் புகைப்படங்கள் உள்ள டி.சர்ட்டை அணிந்திருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read In English: Janhvi Kapoor wears T-shirt with boyfriend Shikhar Pahariya’s name and pictures. See here
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் சில காலமாக டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்கள் இருவரும் அவ்வப்போது செய்யும் வித்தியாசமான செயல்கள் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில், ஜான்வி தனது ‘ஷிகு’ நெக்லஸில் காதலர் பெயர் இருந்தபடி அணிந்திருந்தார். தற்போது அதை விட ஒரு படி மேலே புதிதாக ஒன்றைய செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலான ஒரு புகைப்படத்தில், ஒரு ஹோட்டல் ஊழியர்களுடன் ஜான்வி கபூர் சக நடிகர் வருண் தவானுடன் போஸ் கொடுத்துள்ளனர். இநத புகைப்படத்தை விட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஜான்வி அணிந்திருந்த டி-சர்ட் தான். அந்த டி-ஷர்ட்டில் அவரது காதலன் ஷிகர் பஹாரியாவின் பெயர் மற்றும் அவரது படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இந்த புகைப்படம் நாசிக்கில் உள்ள சொகுசு ஹோட்டலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவில்”சமீபத்தில் பாலிவுட்டின் மிக திறமையான நட்சத்திரங்களான ஜான்வி கபூர் மற்றும் வருண் தவான் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெருமை எங்களுக்கு கிடைத்தது, அது உண்மையிலேயே உற்சாகமான தருணங்களில் ஒன்றாகும் என்று பதிவிட்டுள்ளனர்.
ஜான்வி கபூர், காதலன் ஷிகர் பஹாரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது தந்தை போனி கபூர் தயாரிப்பில் வெளியான மைதான் என்ற படத்தின் ஸ்கிரீனிங் போது, ஜான்வி, ஷிகரின் பெயருடன் ஒரு நெக்லஸை அணிந்திருந்தார். அதேபோல் மிர்ச்சி ப்ளஸ் உடனான முந்தைய நேர்காணலில், ஜான்வி ஷிகருடனான தனது உறவு குறித்து பேசினார்.
A post shared by Courtyard by Marriott Nashik (@marriottnashik)

“அவர் என் வாழ்க்கையில் 15-16 வயதிலிருந்தே இருக்கிறார். என் கனவுகள் எப்பொழுதும் அவனுடைய கனவுகளாகவும் அவனுடைய கனவுகள் எப்பொழுதும் என் கனவுகளாகவும் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் உயர்த்தியதைப் போலவே நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு அமைப்பாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
வேலையில், ஜான்வி கபூர் கடைசியாக தெலுங்கில் வெளியான தேவரா: பகுதி 1 இல் நடித்திருந்தார். அடுத்ததாக ஷஷாங்க் கைதான் இயக்கிய சன்னி சங்கரி கி துளசி குமாரியில் படத்தில் வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் ராம் சரண் நடிக்க உள்ள ஆர்.சி.16 படத்திலும் ஜான்வி நாயகியாக நடிக்க உள்ளார்.

Kerala Lottery Result
Tops