விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்து வரும் பிக்பாஸ் சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சின்னத்திரை மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலங்களாக இருக்கும் நபர்களை போட்டியளர்களாக தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்புவார்கள். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களது ரியல் கேரக்டர்களை தக்கவைத்துக்கொள்ள எதிர்கொள்ளும் சவால்களே இந்நிகழ்ச்சி.
மேலும் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த டாஸ்க் மற்றும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்து, ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 7 சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் கொடுக்கும் ஸ்பீச், மற்றும் குட்டி கதைகள், அறிவுரைகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த இரு சீசன்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஒரு வாரம் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இவரின் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வியும் எழுந்தது. அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சி தொடர்பான ப்ரமோ அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது. இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கடந்த சீசனில், சாம்பியன் பட்டம் பெற்ற வி.ஜே.அர்ச்சனாவின் சிபாரிசில், சீரியல் நடிகர் அருண் பிரசாத் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.