விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில, இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ், இந்த சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது வேறுமாதிரி பேசியுள்ளதால் ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாக்யா, கோபி, ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில், விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியல் சமீபகாலமாக பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக இந்த சீரியல் விரைவில் முடிய வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து சொல்ல தொடங்கிவிட்டனர். அதே சமயம் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் பல கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சதீஷ், இந்த சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர் சதீஷ் அவ்வப்போது சீரியல் குறித்த அப்டேட்களை தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக சதீஷ் அறிவித்திருந்தார். ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில், தான் விலகுவதாக எடுத்த முடிவை மாற்றிக்கொண்டதாகவும், தொடர்ந்து சீரியலில் நடிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். தற்போது கோபி கேரக்டர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இந்த சீரியல் விரைவில் முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்ததனர். அதனை உறுதி செய்யும் விதமாக சதீஷ் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)
அதில் பாக்கியலட்சுமி சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. விரைவில் முடிந்துவிடும் என்று கூறி வந்த நிலையில், தற்போது நடிகர் சதீஷ நான் சீரியல் முடிந்துவிடும் என்று சொல்லவில்லை. இந்த சீரியல் 5 வருடங்களை கடந்துவிட்டது. இப்போதைக்கு முடியாது என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)
அதே போல் இன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் எதற்குமே ஒரு முடிவு இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.