கடலுக்குள் இறங்கிய ரத்னா.. கண்ணீர் மயமாகும் சண்முகம் வீடு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இன்று, ரத்னா வெங்கடேஷ் பேசியதும் சண்முகம் சண்டையின் என்பது வீட்டுக்கு அழைத்துச் செல்ல பரணி மீண்டும் அழைத்து வந்து வெங்கடேஷ் வீட்டில் விட்டு சென்றது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து அண்ணா என்னை மன்னித்துவிடு நான் செய்வது தப்பு தான் ஆனா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல என கடலுக்குள் இறங்குகிறாள்.
மறுபக்கம் சண்முகம் மற்றும் பரணி ரொமான்ஸ் செய்ய சண்முகம் ரத்னாவின் ஞாபகம் வர ரத்னாவை பார்த்துட்டு வந்து விடலாம் என்று சொல்லி பரணியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். வெங்கடேஷ் வீட்டுக்கு வந்து ரத்னாவை கேட்க ரத்னா வீட்டில் இல்லை என்ற விஷயம் தெரியவந்து சண்முகம் கோபமடைந்து அவர்களிடம் சண்டையிடுகிறான்.
அடுத்ததாக ரத்னா காணாமல் போன விஷயம் வைகுண்டம் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிய வர எல்லோரும் ஒன்று சேர்ந்து ரத்னாவை தேடத் தொடங்குகின்றனர். கடலுக்குள் இறங்கிய ரத்னாவின் நிலை என்ன? சண்முகம் காப்பாற்றுவானா இல்லையா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பதிலுக்கு பதில் அடி கொடுக்கும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரி இடம் வேலையாளாக சேர்ந்த நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடக்க திட்டமிடுகிறாள். கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவனை வீட்டுக்குள் அழைக்கிறாள். அங்கே சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரா கலா என இருவர் மட்டும் அமர்ந்திருக்க கார்த்திக்கு உட்கார சேர் கூட இல்லாமல் இருக்கிறது.
இந்த சமயத்தில் ஒரு பெண்மணி டி கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை தட்டி விட்டு சந்திர கலா மீது கொட்டி விட்டு மன்னிப்பு கேட்கிறான். சந்திரகலா தனது துணியை அலம்பி கொண்டு வருவதற்காக உள்ளே செல்ல கார்த்தி அந்தச் சேரில் உட்கார்ந்து சாமுண்டீஸ்வரியை ஷாக்காக்குகிறான்.
இதைத்தொடர்ந்து அபிராமி கார்த்திக்கு போன் செய்து எல்லாம் நல்லபடியா நடக்குதா என விசாரிக்க கார்த்திக்கும் எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு என சொல்லி போனை வைக்கிறான். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் வெளியே கிளம்ப கார்த்தி தான் கார் ஓட்ட வேண்டும் என சொல்கின்றனர். கார் ஓட்டுவது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி விதிமுறைகள் எல்லாம் பின்பற்ற வேண்டும் என கண்டிஷன் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.