kerala-logo

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்: ஒரே வரிசையில் தனுஷ் – நயன்தாரா; வைரல் வீடியோ!


தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ் நயன்தாரா இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read In English: Nayanthara and Dhanush avoid each other at producer Aakash Baskaran’s wedding amid feud. Watch
நயன்தாராவின் திருமணம் மற்றும் அவரது வாழ்க்கை குறித்து ஆவணப்படத்திற்கு, தனுஷ் என்.ஓ.சி கொடுக்காதததால், அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது குறித்து தனுஷ் தரப்பில் இதுவரை எந்த பதில் அறிக்கையும் வெளியிடவில்லை.
இதனிடையே, தனுஷ் நடித்து இயக்கி வரும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், திருமண விழாவில் தனு’் – நயன்தாரா இருவரும் கலந்துகொண்டனர். திருமண விழாவின் பல வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ள நிலையில், தனுஷ் நயன்தாரா இருவரும், ஒரே நேரத்தில் திருமண மண்டபத்தில் மற்ற விருந்தினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.  ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதைத் தவிர்த்துள்ளனர்.
Dhanush and Nayanthara at Idli kadai producer’s wedding 😂pic.twitter.com/gjDZIxbnGT
ஒரு வீடியோவில், தனுஷ் மற்றும் நயன்தாரா முன் வரிசையில் அமர்ந்திருந்தனர், ஆனால் எதிரெதிர் முனைகளில் இருந்தனர். திருமண விழாவில் தனுஷ் கவனம் செலுத்திய நிலையில், நயன்தாரா மற்றொரு விருந்தினருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். இந்த திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Dhanush & #Nayanthara together at the recent wedding of Producer AakashBaskaran pic.twitter.com/ulZDckjak8
தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். முக்கிய பிரபலங்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமணத்திற்கு தனுஷ் அழைக்கப்படவில்லை. அதே சமயம் இந்த திருமணம் தொடர்பான ஆவணப்படத்திற்கு, நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு, நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops