kerala-logo

திருப்பதியில் சாமி தரிசனம்: அடுத்த பட அப்டேட் கொடுத்த சந்தானம்; என்ன படம் தெரியுமா?


காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் சந்தானம், திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நிலையில், அங்கிருந்து தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் சந்தானம். 2002-ம் ஆண்டு வெளியான பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம், சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான பல படங்களில் சந்தானம் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
அதோடு மட்டுமல்லாமல், ஆர்யா, ஜெயம்ரவி, சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய சந்தானம், சிவா மனசில சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், கலகலப்பு, உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் கலக்கியிருந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய சந்தானம், 2013-ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ஹிட்டாக அமைந்த நிலையில், அடுத்து தில்லுக்கு துட்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சந்தானம் ஹீரோவாக நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் இதுதான். அதன்பிறகு, பல படங்களில் சந்தானம் நடித்திருந்தாலும் எந்த படமும் அவருக்கு சரியாக கை கொடுக்காத நிலையில், கடந்த ஆண்டு வெளியான அவரின் 125வது படமான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
2024-ம் ஆண்டு வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங்கு என இரு படங்களில் நடித்திருந்த சந்தானம் தற்போது டிடி ரிட்டன்ஸ் படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனிடையே திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சந்தானம், தரிசனம் சிறப்பாக இருந்தது. அடிக்கடி இங்கு வருவோம். அதேபோல் தான் இப்போதும் சந்திருக்கிறோம். டிடி ரிட்டன்ஸ் படத்தில் அடுத்த பாகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொள்ள வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Kerala Lottery Result
Tops