விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரம் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி இறந்துபோவதாக இனிவரும் எபிசோடுகள் அமைந்துள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ள நிலையில், ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ரோசரி அதற்கு காரணம் என்ன என்று அவரே கூறியுள்ளார்.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஜூலை 2020-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் குடும்பக் கதையாகத் தொடங்கிய இந்த சீரியல், விறிவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ரசிகர்களைக் கவர்ந்து டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில், குடும்பமே உலகமாக வாழ்கிறாள் பாக்கியலட்சுமி. 2 திருமணமான மகன்கள், கல்லூரி படிக்கும் மகள், இருந்தாலும் தனது வாழ்க்கை, விருப்பமே முக்கியம் என்று பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் பாக்கியாவின் கணவர் கோபி. இரண்டாவது மனைவி ராதிகாவும் கோபியும் எத்தனை இடைஞ்சல் கொடுத்தாலும் வாழ்க்கையில் முன்னேறி சாதித்துக்கொண்டே இருக்கிறார் பாக்யா. அதே நேரத்தில், குடும்பத்தை தனி ஆளாக, சுமந்து வருகிறார்.
பாக்கியலட்சுமிக்கு கணவன், மாமியார் ஆதரவுதான் இல்லையே தவிர, ஆரம்பத்தில் இருந்தே மாமனார் ராமமூர்த்தியின் முழு ஆதரவு இருந்தது. அவர் எப்போதும் பாக்யாவை ஆதரித்து தனது மருமகளுக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில், தனது மகன் கோபியின் தவறான நடத்தைகளை கண்டித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி இறந்துவிடுவதுபோல திடீரென சீரியலின் கதை மாறியுள்ளது.
. இதனால், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
பாக்கியாவை கோபி கொடுமைப்படுத்தி அவளை ஏளனமாகப் பேசி முட்டாள் என மட்டம் தட்டினாலும், பாக்யா தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி சொந்த காலில் நின்று சாதித்துக் காட்டியிருக்கிறார். பாக்யா எல்லாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டியதால், கோபி பாக்யாவை குற்றம் சொல்லி பிறகு, மூக்கு உடைபடுவது எல்லாம் முன்பைப் போல பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த சூழலில்தான் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி இறப்பதாகக் கதை மாறியிருக்கிறது. நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏன் கொல்கிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வியும் ஏமாற்றமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி கதாபாத்த்தில் நடிக்கும் ரோசரியே காரணம் என்ன என்று கூறியுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் தனது கதாபாத்திரம் முடிவுக்கு வருவது குறித்து ரோசரி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஆரம்பத்தில் எனக்கு ஏன் இந்த திடீர் முடிவு ஏன் என தோன்றியது. நல்ல பாசிட்டீவ் கதாபாத்திரம், முடிந்தது வருத்தமாக தான் இருக்கு. தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குதுங்கிறதை சொன்னாங்க, கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரம் முடிவடையுதுன்னும் சொல்லியிருந்தாங்க, அதனால் வேற வழி இல்லை.
இதை ஏன் நேரில் வந்து கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, இறுதிச்சடங்கு எல்லாம் ரியலா பண்ணனும்னு சொன்னாங்க, சரி ஓகே பண்ணுங்க சொல்லிட்டேன். ராமமூர்த்திக்கு தான் அவங்க இறுதிச்சடங்கு பண்றாங்கனு எடுத்துக்கிட்டேன், நான் கதையை மதிப்பவன். அது நடிப்பு அவ்ளோ தான், ரோசரி நல்லாதான் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.