kerala-logo

பாட்டு சொல்லிக் கொடுத்த இளையராஜா: விழுந்து விழுந்து சிரித்த எஸ்.ஜானகி; பலமுறை ரீடேக் வாங்கிய பாடல்!


3 வயதில் பாட தொடங்கி தற்போதுவரை ஒரு வெற்றிகரமாக பாடகியாக  வலம் வரும் எஸ்.ஜானகிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா ஒஉரு பாலை சொல்லிக்கொடுக்கும்போது பலமுரற அவர் கஷ்டப்பட்டு பாடியதாக கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் இளைரயாஜா இசையிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அநத வகையில் வந்த ஒரு பாடல் தான் ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ என்ற பாடல்.
1982-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் சகலகலா வல்லன். கமல்ஹாசன், அம்பிகா, சில்க் ஸ்மிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வரும் அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றும் ரசிக்கக்கூடிய பாடல்களாக நிலைத்திருக்கிறது.
அந்த வகையில் வந்த ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடியிருப்பார். இந்த பாடலை அவர் பாட வந்தபோது, இளையராஜா எப்படி பாட வேண்டும் என்று ஜானகிக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். அவர் சொல்லிக்கொடுத்ததை பார்த்த ஜானகி விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதன்பிறகு இளையராஜா சொன்னதை கேட்டு பாடி முடித்துள்ளார். ஆனால் இந்த பாடலை பாட பலமுறை ரிகர்சல் செய்தும், பல டேக்குகள் வாங்கியும் பாடி முடித்துள்ளார்.

இந்த வகையில் வெளியான ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், காலம் கடந்த ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது.

Kerala Lottery Result
Tops