பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற, நடிகைளுயும் சின்னத்திரை தொகுப்பாளினியுமான, ஜாக்குலின் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2014-ம் ஆண்டு நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜாக்குலின். தொடர்ந்து ஆண்டாள், அழகர், ஆபீ்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க தொடங்கிய இவர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 3 சீசன்களை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்திருந்தார். இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அதேபோல், 2018-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜாக்குலின், அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது கோவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஜாக்குலின், 102 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து 6-வது இடத்தை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை கூட, எலிமினேஷன் நாமினேட் ஆகாமல் தப்பித்த ஜாக்குலின், கடைசியில் பண்பெட்டிடாஸ்கில், சில வினாடிகளில் தோல்வியை சந்தித்தார். அவர் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜாக்குலின் அடுத்து எந்த சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ள ஜாக்குலின், தனது பிறந்த நாளை தனது பிக்பாஸ் நண்பர்கள் சௌந்தர்யா, ரயான் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜாக்குலின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.