kerala-logo

மீண்டும் இணைகிறதா கங்குவா கூட்டணி? சூர்யா – சிவா இணைந்து சாமி தரிசனம்!


சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியாக கங்குவா திரைப்படம் இதுவரை இல்லா வகையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இருவரும், ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் இயக்குனர் சிவா, நடிகர் சூர்யா சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வெளியான திரைப்படம் கங்குவா. பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்த இந்த படத்தில், திஷா பதானி நாயகியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத வகையில், பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட கங்குவா திரைப்படம், கடந்த நவம்பர் 14-ந் தேதி வெளியாக நிலையில், முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்கு முக்கிய காரணம் படம் வெளியாகும் முன்பே, சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருமே படம் ரூ2000 கோடி வசூல் செய்யும் என்று கூறியிருந்தனர். ஆனால் படம் வெளியான உடனே அனைத்தும் தலைகீழாக மாறியது.
வெளியான 3 நாட்களில் கங்குவா திரைப்படம் 100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படத்திற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சுசீந்திரன், தெலுங்குக்கு ஒரு பாகுபலி போன்று, தமிழுக்கு கங்குவா என்று கூறியிருந்தார். ஆனாலும் நெட்டிசன்கள் பலரும் கங்குவா படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில், சிவராஜ்குமார் நடித்த பைரதி ரனகல் படம் வெளியானதால், கங்குவா படம் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
கங்குவா படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் இயக்குனர் சிவா, நடிகர் சூர்யா சுவாமி தரிசனம் செய்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ‘கங்குவா’ திரைப்படம் சந்தித்து வரும் எதிர்மறை விமர்சனங்களுக்கு திரை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திரையரங்கு வளாகங்களில் யூ டியூபர்கள் பட விமர்சனங்களில் ஈடுபட கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops