விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் டெட்டிங்கில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இருவரும் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அப்போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் இருவரும் தற்போது டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து அவர்கள் இருவருமே அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அவ்வப்போது இவர்கள் இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இதில் ராஷ்மிகா முகம் தெரிந்தால், அவரின் முகம் தெரியாது. விஜய தேவரகொண்டா முகம் தெரிந்தால், ராஷ்மிகா முகம் தெரியாது. இதனால் இது உண்மைதான அல்லது போலியான தகவலா என்ற குழப்பமும் எழுந்து வருகிறது.
அதே சமயம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், உங்களின் வருங்கால கணவர் குறித்து ஹிண்ட் கொடுங்கள் என்று தொகுப்பாளர்கள் கேட்டபோது, இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் கூறியிருந்தார். இதன் மூலம் அவர் விஜய் தேவரகொண்டாவை தான் சொல்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு பெண் அமர்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், இருப்பது ராஷ்மிகா தான் என்று கூறப்படும் நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் நீல நிற ஆடைகளை அணிந்து, ஒரு உணவகத்தில் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா “புஷ்பா 2, குபேரா” மற்றும் “சாவா” ஆகிய படங்களில் ரிலீஸ்காக காத்திருக்கும நிலையில், விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
