kerala-logo

வசூலில் மாஸ் காட்டும் அமரன்: கோவையில் முப்படை அதிகாரிகளுக்கு இலவச சிறப்பு காட்சி!


கோவையில் அமரன் திரைப்படத்தை இலவசமாக பார்க்க,இராணுவ முப்படை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் 700 பேருக்கு, ப்ராட்வேஸ் திரையரங்கில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, அமரன் படம் உருவானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தனர். கமல்ஹாசன் தயாரித்த இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வசூலில் சாதனை படைத்து வரும் அமரன் திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பாக ராணுவ வீரர்களுக்கு திரையிடப்பட்ட நிலையில், தற்போது கோவையில் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு காட்சி திரைபிடப்பட்டுள்ளது. கோவையில் சூலூர்,ரேஸ்கோர்ஸ்,கோவைபுதூர் போன்ற பகுதிகளில் கணிசமாக முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள், அவரது குடும்பத்தினர்களுடன்  வசித்து வருகின்றனர்..அவர்களை கவுரவிக்கும் வகையில் கோவை விமான நிலையம் அருகில் உள்ள பிராட்வேஸ் சினிமாஸில் 700 பேருக்கு அமரன் திரைப்படம் பார்க்க இலவச காட்சிக்கு பிராட்வேஸ் சினிமா  நிர்வாகத்தினர் அனுமதி அளித்தனர்.
இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த,110 காலாட்படை பட்டாலியன் – இந்திய பீரங்கிப்படை 35 களப் படைப்பிரிவு –  இந்திய கடற்படை  ஐ.என்.எஸ் அக்ரானி – இந்திய விமானப்படை 43.ஏர்.விங் – மற்றும் இந்திய விமானப்படை நிர்வாகக் கல்லூரி என இராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் சுமார் 700 பேர் அமரன் படத்தை பார்த்து ரசித்தனர்.
பிராட்வேஸ் சினிமாஸின் எபிக் மற்றும் ஐமேக்ஸ் என இரண்டு ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில்  திரைப்படத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில சப்டைட்டிலுடன் (“subtitle”)தி்ரையிடப்பட்டது குறிப்பிடதக்கது. இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில்  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தததாக பிராட்வேஸ் நிர்வாக தேஜல் சதீஷ் மற்றும் நேஹா சதீஷ் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Kerala Lottery Result
Tops