kerala-logo

விஜய் டிவியின் புதிய சீரியல் ’கண்மணி அன்புடன்’; முக்கிய நடிகர்கள் யார் தெரியுமா?


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள ‘கண்மணி அன்புடன்’ சீரியலில் நவீன் வெற்றி, துஷிதா மற்றும் மதுமிதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகின்றன.

இந்தநிலையில், விஜய் டிவி புதிய சீரியலை களமிறக்கியுள்ளது. காதலை மையமாக வைத்து ஒளிப்பரப்பாக உள்ள கண்மணி அன்புடன் சீரியலில், நவீன் வெற்றி, துஷிதா மற்றும் மதுமிதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Join Get ₹99!

.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தியாக நடித்து பிரபலமானவர் நவீன் வெற்றி. தற்போது தனது மனைவியுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னதிரையில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். நவீன் வெற்றி முன்னதாக நீலி, தேன்மொழி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மல்லி சீரியல் மூலம் பிரபலமான துஷிதா என்ற கிரேசி தங்கவேல் இந்த சீரியலில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். துஷிதா திருமகள், சுந்தரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்தவர்.

இந்த சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர்கள், சீரியல் ஒளிப்பரப்பாக தொடங்கும் தேதி, ஒளிப்பரப்பாகும் நேரம் உள்ளிட்டவற்றை விரைவில் சீரியல் குழு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kerala Lottery Result
Tops