கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி சீரியல் ”லட்சுமி நாராயணா நமோ நமஹ”. ஆன்மீக சீரியலான இதில், இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
தன் தம்பியை அழித்த நாராயணரை பழிவாங்க அசுரன் ஹயக்ரீவன் அனந்தசாகரத்தில் விஷம் கலப்பது, நாராயணரும் ஜீவராசிகளும் சிக்கிக்கொள்வது, நாராயணரையும் ஜீவராசிகளையும் காப்பாற்ற லட்சுமி எடுக்கும் முயற்சி என்ன உள்ளிட்ட பரபரப்பான எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது.
அசுரன் ஹயக்ரீவன் லட்சுமியை அபகரிக்க சென்று நாராயணரால் அழிந்த தன் தம்பியின் சிதைக்கு கொள்ளிவைத்த கையோடு நாராயணரை பழிவாங்க சபதம் எடுத்து, அதற்கான சதித்திட்டமும் தீட்டுகிறான். இதற்காக பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளின் உயிரைக் குடிக்கும் கொடிய விஷத்தை நாககன்னிகைகளிடம் கேட்டுப் பெறுகிறான். ஆனால், அவனது தந்தை மாரீசனும் தாயும் தடுத்து புத்திமதி புகட்ட முயல்கின்றனர். அசுரன் ஹயக்ரீவன் கேட்பதாக இல்லை.
விஷம் நிறைந்த பானையை எடுத்துக்கொண்டு போய் நாராயணர் இருக்கும் அனந்தசாகரத்தில் கலந்து விடுகிறான். பிரபஞ்சமே திணறுகிறது. மொத்த ஜீவராசிகளும் அழிவிலிருந்து தப்பிக்க முடியாமல் போராடுகிறார்கள். அந்த கொடிய விஷத்தினால் நாராயணரும் பாதிப்படைகிறார். இதனை காணும் லட்சுமி நாராயணருக்கே இந்த நிலைமை என்றால் யாரிடம் போய் உதவி கேட்பது என்று அச்சத்தில் கண்கலங்குகிறார்.
அசுரன் ஹயக்ரீவன் நாராயணரை பழிவாங்கி விட்டதாக ஆர்ப்பரிக்கிறான். அப்போது லட்சுமியை தேடி பார்வதிதேவியான ஆதிசக்தி வருகிறார். ஆதிசக்தி லட்சுமியிடம் நாராயணரையும் ஜீவராசிகளையும் காப்பாற்றும் உபாயத்தை குறிபுணர்த்திவிட்டு செல்கிறார். லட்சுமிக்கு வழி புலப்படுகிறது. நம்பிக்கை ஏற்படுகிறது. ஹயக்ரீவனின் கொடிய விஷத்தை முறிக்கும் நிவாரனம் தேடி புறப்பட்ட லட்சுமியை அசுரன் ஹயக்ரீவனின் அசுரப்படை தடுக்க முயல்கிறது. அந்த தடைகளையெல்லாம் கடந்து லட்சுமி செல்கிறார்.
அப்போது நேராக லட்சுமி கோமாதாவிடம் செல்கிறார். கோமாதாவிற்கு பதிலாக நந்தினி என்கிற பசு வந்து என்ன உதவி வேண்டும் என்று வினவுகிறது. அதனிடம் லட்சுமி அனந்தசாகத்ரத்தின் கொடிய விஷத்தை போக்கும் அமுதம் கேட்கிறார். நந்தினி அமுதக்கலயத்தை தருகிறது. முதலில் நாராயணரை காப்பாற்ற லட்சுமி அமுதக்கலயத்துடன் கிளம்புகிறார்.இதனிடையே நேரம் செல்ல செல்ல நாராயணரும் ஜீவராசிகளும் கடும் பதிப்புக்கு உள்ளாகின்றனர்.
லட்சுமி அமுதக்கலயம் மூலம் கொடிய விஷத்தால் பாதிப்படைந்த நாராயணரையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பாற்றியது எப்படி என்பது உள்ளிட்ட பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.