நடிகர் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தனக்கு கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது என்பது குறித்து ஒரு நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.
Read In English: Shruti Haasan was not allowed to go to the temple as parents Kamal Haasan, Sarika were not religious: ‘Discovered God chori chori’
கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் மகளான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது நம்பிக்கையைப் பற்றி பேசிய நிலையில், இந்த நம்பிக்கை தான் அவரது வாழ்க்கையில் பலமாக இருந்தது என்று நம்புவதாக கூறியுள்ளார். அவருடைய கடவுள் நம்பிக்கை மற்றும் பக்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த நம்பிக்கை அவரின் பெற்றோரிடம் இருந்து அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக, ஸ்ருதி தன் நம்பிக்கையை தானே கண்டுபிடித்த நிலையில், இப்போது அது அவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.
பிங்க்வில்லா இணையதளத்தில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், வாழ்க்கையில் தன்னை வலிமையாக்கியது எது கேட்டால், கடவுள் மீது எனக்குள்ள நம்பிக்கை தான் என்று கூறியுள்ளார். “என் வீடு ஒரு நாத்திக இல்லம். என் அம்மா ஆன்மீகவாதி ஆனால் என் அப்பா நாத்திகவாதி. இதனால் நான் வளரும்போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்ததில்லை, அதை நானே எனக்குள் கண்டுபிடித்தேன். கடவுளின் சக்தியை நான் மிகவும் நம்புகிறேன், அந்த சக்தி என்னை என் வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.
ஸ்ருதியின் பெற்றோர்களான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோர் தாராளவாத மற்றும் முற்போக்கான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர்கள், மேலும் அவர்களின் மகள் ஆன்மீகத்தில் வேரூன்றிய ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது சுவாரஸ்யமானது. ஸ்ருதி தனது தந்தை ஒரு நாத்திகர் மற்றும் அவரது தாயார் ஆன்மீகவாதி என்று கூறியுள்ளார். ஆனால், அவர் கடவுளை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “எங்கள் காலனியில், நான் சைக்கிள் ஓட்டுவதற்கு ஒரு பாதை இருந்தது. அப்போது மெயின் கேட்டுக்கு அருகில் சைக்கிள் ஓட்ட வேண்டாம் என்று சொன்னார்கள். சில காரணங்களால், தினமும் காலையில் ஒரே நேரத்தில் சர்ச் மற்றும் கோவில் மணிகளின் சத்தம் கேட்கும். இதில் தினமும் எந்த சத்தத்தை நான் எதை முதலில் கேட்பேன், எங்கு நான் முதலில் செல்வேன் என்று யோசிப்பேன். என் வீட்டிலிருந்து கோவில் வெகு தொலைவில் இருந்ததால் வாரம் ஒருமுறை சர்ச்சுக்குப் போவேன். இது 5-6 மாதங்களாகியும் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை.
குழந்தைகளுடனான விஷயம் என்னவென்றால், நீங்கள் அவர்களிடம் ஏதாவது செய்ய வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் அதை இன்னும் அதிகமாக செய்வார்கள். என் விஷயத்தில், அது மதம் என்று கூறியுள்ளார். தான் முதலில் கோவிலுக்குச் சென்றது ஒரு குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்தது, இன்றுவரை அதை தான் விரும்புவதாக ஸ்ருதி கூறியுள்ளார்.
முதன் முதலில் என் தாத்தாவுடன் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றேன். என்னை ஒரு கோவிலுக்கு அழைத்து வந்ததை என் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் என் தாத்தா இறந்துவிட்டார். நான் எப்போதும் என் தாத்தாவுடன் தொடர்பு வைத்திருந்தேன், அது ஒரு ஆன்மீக தொடர்பு போல மாறியது என்று கூறியுள்ளார்.
