வைரமுத்து எழுதிய ஒரு பாடலை பாட வந்த, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், இந்த பாடலை என்னால் பாட முடியாது என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம் என்று சொல்லி தெறித்து ஓட முயன்றுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கடந்த 1999-ம் ஆண்டு அஜித் – ஷாலினி நடிப்பில் வெளியான படம் அமர்களம். சரண் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒரு ரவுடிக்குள் உருவாகும் காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. நாசர், ரகுவரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க, கவிஞர் வைரமுத்து இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
அமர்களம் என்று சொன்னாலே சட்டென்று நினைவுக்கு வருவது ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் தான். ஒருமுறை கவிஞர் வைரமுத்து காரில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு பார்சலை பிரித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர் கவிஞரே இதில் இருந்து பூதம் வந்து என்ன வேண்டும் என்று கேட்டால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது வைரமுத்துக்கு எழுத்த கற்பனையில் இந்த பாடலை எழுதியுள்ளார்.
இந்த பாடலை படித்து பார்த்த இயக்குனர் சரண், தனது படத்தில் நாயகனுக்கு என்ன இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ அது இதில் இருக்கிறது என்று நினைத்து, இந்த பாடலை அப்படியே படத்தில் வைக்குமாறு இசையமைப்பாளர் பரத்வாஜ்ஜிடம் இசையமைக்க கூறியுள்ளார். அந்த பாடலை படித்து பார்த்த பரத்வாஜ் பாடலாகவே பாடியுள்ளார். ஆனால் இவ்வளவு நீளமான பாடலை யார் பாடுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்பிறகு இந்த பாடலை பாட எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அழைக்கப்பட்டுள்ளார். அவர் பாடலை பார்த்துவிட்டு என்னை ஆளவிடுங்க சாமி என்ன விளையாடுறீங்களா? ஆனால் இயக்குனரும் இசையமைப்பாளரும் இந்த பாடலை பாடுங்கள். மறக்க முடியாத பாடலாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே எஸ்.பி.பி மூச்சுவிடாமல் பாடிய ஒரு பாடல் ஹிட்டானதால் இந்த பாடலை அவர் பாட வேண்டும் என்று முடிவு செய்து அழைத்துள்ளனர். ஆனால் இந்த பாடலை பாட எஸ்.பி.பி முடியாது என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இசையமைப்பாளர் பரத்வாஜ் எஸ்.பி.பி-யை சமாதானம் செய்து அந்த பாடலை பாட வைத்துள்ளனர். இந்த பாடலை பாடும்போது கேபின் உள்ளேயே நின்றிருந்த இயக்குனர் சரண், எஸ்.பி.பி பாடி முடித்தவுடன் அவரது காலில் விழுந்து வணங்கியுள்ளார். இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
