சிவகார்த்திகேயன். ஜெயம் ரவி. அதர்வா ஆகியோர் நடிக்கும் பராசக்தி திரைப்படம் ஷூட்டிங் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அட்மின் கட்டிடத்தில் கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வருகிறது. திங்கள்கிழமை வரை இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.
மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் கதையை மயமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாக தெரிய வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த போது அதை மையமாக கொண்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் சைக்கிளில் சுற்றுவது போன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் வருகின்ற திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
