kerala-logo

இவருக்கு ப்ரோபோஸ் செய்ய ஆளே இல்லையாம்: நடிகை அர்ச்சனா குமார் ஃபீலிங் க்ளிக்ஸ்!


சென்னையில் பிறந்து வளர்ந்து அர்ச்சனா குமார், சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போது அர்ச்சனா, மீடியா மற்றும் நடனம் மீது அதிக ஆர்வமாக இருந்துள்ளார்.
ஜீ தமிழ் டிவியில், ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் நடிகர் சித்தார்த் குமாருடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.
சீரியல் பிரபலம் அர்ச்சனா குமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார்.
ஈரமான ரோஜாவே சீரியலில், தேனு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் அர்ச்சனாவுக்கு நிறைய ரசிகர்களை தேடித் தந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா, கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Kerala Lottery Result
Tops