ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்று மாரி. சூப்பர் நேச்சுரல் காட்சிகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆஷிகா படுகோன், மாரி கேரக்டரிலும், அவரது கணவர் சூர்யா கேரக்டரில் ஆதர்ஷூம் நடித்த இந்த சீரியல் ஒரு குழந்தையை மையமாக வைத்து தற்போது கதை நகர்ந்து வருகிறது.
இந்த சீரியலில், மாரி கேரக்டரில் நடித்து வந்த ஆஷிகா படுகோன் சமீபத்தில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததார். அதனால் சீரியலில் அவர் இறப்பது போல் கட்சி அமைக்கப்பட்டது.
இறந்த மாரி ஆவியாக எமலோகம் சென்று, மீண்டும் துர்கா கேரக்டரின் உடலில் தஞ்சம் அடைவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டது. தற்போது துர்கா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அஞ்சனா ஸ்ரீனிவாஸ்
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.