kerala-logo

உங்க பல்லவி வேண்டாம்: இசைஞானிக்கு செக் வைத்த தயாரிப்பாளர்; பாட்டு செம்ம ஹிட்டு!


தான் இசையமைக்கும் படங்களில் பாடல்களுக்கான முதல் வரியை தான் சொல்லிவிடும் வழக்கத்தை வைத்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, ரஜினி நடித்த ஒரு பாடலுக்கு முதல் வரியை சொல்ல, அந்த வரி வேண்டாம் என்று சொல்லி, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய ஒரு வரியை முதல்வரியாக ஆக்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்.
தமிழ் சினிமாவில், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, முதல் படத்தில் இருந்தே இசையில் முத்திரை பதித்து வருகிறார். இசை மட்டுமல்லாமல், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல திறமைகளுடன் வலம் வரும் இவர், தனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது.
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமான இளையராஜா, அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ளார். கிராமத்து படமாக இருந்தாலும், நகரத்து கதையாக இருந்தாலும், இசையில் ஜாலம் செய்யும் வல்லமை படைத்த இளையராஜா, பாடல் பாடுவது, எழுதுவது என தனது தனித்திறமையுடன் வலம் வருகிறார்.
பொதுவாக தான் இசையமைக்கும் படங்கள் மற்றும் பாடல்களுக்கான முதல் அடியை இளையராஜாவே சொல்லிவிடுவார். இந்த வரிகளை வைத்து, கவிஞர்கள், மற்ற வரிகளை எழுத வேண்டும். அந்த வகையில், ரஜினிகாந்த், பூர்ணிமா நடிப்பில், ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஒரு படத்தில் இந்த மாதிரியான ஒரு நிகழ்வு நடந்துள்ளது, 1983-ம் ஆண்டு, வெளியான படம் தங்கமகன். இந்த படத்தை தயாரித்தவர் ஆர்,எம்.வீரப்பன். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில், தங்கமகன் படத்தில் வந்த டிஸ்கோ பாடலான வா வா பக்கம் வா பாடல் இன்றும் பலரும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலுக்கு இசையமைத்த இளையராஜா பாடலுக்கான முதல் வரியை கூறியுள்ளார். இந்த வரியை கேட்ட தயாரிப்பாளர், ஆர்.எம்.வீரப்பன் இந்த வரி சரியாக இல்லை, என்று கூறி கவிஞர் முத்துலிங்கம் எழுதிய வா வா பக்கம் வா என்ற வரியை முதல் வரியாக மாற்றியுள்ளார். அதன்பிறகு இளையராஜா சொன்ன வரிகளான டிஸ்கோ டிஸ்கோ வரிகள் முதல்வரிக்கு பிறகு பாடலில் சேர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் இந்த டிஸ்கோ டிஸ்கோ பாடல் பயன்படுத்தப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala Lottery Result
Tops