kerala-logo

உண்மையை உடைத்த பிரவுன் மணி: ரோஹினிக்கு விழுந்த அறை; அண்ணாமலை இப்படி பண்ணிட்டாரே!


விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரோஹினி எப்போது விஜயாவிடம் மாட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த தருணம் இன்றைய எபிசோட்டில் நடந்துள்ளது.
இன்றைய எபிசோட்டில், பிரவுன் மணி தான் ரோஹினியின் மாமா வசிகரன் வேடத்தில் நடித்தவர் என்று மீனா சொல்ல, இவர்கள் எதோ ப்ராங்க செய்கிறார்கள் என்று மனோஜ் சொல்கிறான். ரோஹினியும் இவர்கள் என் மாமாவை அவமானப்படுத்துகிறார்கள் என்று விஜயாவிடம் சொல்ல, விஜயாவும், ரோஹினிக்கு ஆதராவாக பேசுகிறார். அப்போது இவர் பிரவுன் மணி தான் கறிக்கடை தான் வைத்திருக்கிறார் என்று முத்து சொல்கிறான்.
மேலும், நான் முன்பு வாங்கி வந்த கறி கூட இவர் கடையில் இருந்து வாங்கியது தான் என்று மீனா சொல்ல, இவர் சென்னையை தாண்டி எங்கும் போனது கிடையாது. இவருக்கு பாஸ்போர்டே இல்லை என்று முத்து சொல்கிறான். ஆனால் இவற்றை சமாளித்து, எப்படியாவது மணியை வெளியில் அழைத்து சென்றுவிடலாம் என்று ரோஹினி படாதபாடு படுகிறார். அதற்கு ஏற்ப, மனோஜ்வும் விஜயாவும் இவர்கள் சொல்வதை நம்பாமல் பேசுகின்றனர்.
இதில் மனோஜ்  என்னப்பா இவர் லூசு மாதிரி பேசிட்டு இருக்கான் என்று கேட்க, லூசு நாங்க இல்ல நீ தான் உன்னை லூசாக மாற்றி வைத்தது பார்லர் அம்மாதான் என்று சொல்லிவிட்டு அய்யா மணி இப்பாவது உண்மையை சொல்லுங்கள் என்று சொல்ல, நீங்க ஒரு நல்ல குடும்பத்தை இத்தனை நாட்கள் ஏமாற்றி இருக்கீங்க, தயவு செய்து இப்பாவாது ண்மையை சொல்லுங்கள் என்று மீனா சொல்ல, பிரவுன் மணி உண்மையை சொல்லிவிடுகிறார்.
நான் ட்ராமாவில் நடித்து வந்தேன். ரோஹினியின் ப்ரண்ட் வித்யாவை எனக்கு நல்லா தெரியும் அவர் சொல்லித்தான் இப்படி செய்தேன். இதில் தான் எனது வாழ்க்கையே இருக்கிறது என்று ரோஹினி சொன்னதால் தான் நடித்தேன். ஆனால் போக போக நாம தப்பு செய்கிறோம் என்று புரிந்தது. எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ரோஹினியிம், பொய் ரொம்ப நாள் நிலைக்காதுமா? உண்மையை சொல்லிவிட்டால் அப்போது தான் வலி. ஆனால் பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய் சொல்ல வேண்டி வரும் என்று சொல்லிட்டு செல்கிறார்.
பார்லர் அம்மா அவங்க அப்பா மலேசியாவில் இருக்கிறார் என்பது மட்டும் தான் மெயின் பொய். அதன்பிறகு சொன்னது எல்லாமே கிளை பொய்கள் என்று முத்து சொல்ல, உன்னை என் மகளாகத்தேனே பார்த்தேன் எங்களை பார்த்தால் எப்படி தெரிகிறது. என்று அண்ணாமலை கோபமாக திட்ட, விஜயா, அதற்கு ஒரு படி மேலே சென்று, ரோஹினியை அடித்துவிட்டு, நான் பார்த்த மருமகள் என்று உன்மை பெருமையாக பேசினேன். ஆனால் என் முகத்தில் கறியை பூசிவிட்டாய் என்று அடித்’து நொருக்க அத்துடன் எபிசோடு முடிகிறது.

Kerala Lottery Result
Tops