சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த சீரியல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் நாயகியாக நடித்து வந்த மதுமிதா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.ஜே.பார்வதி ஜனனியாக நடித்து வருகிறார்.
சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் சிறப்பாக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வந்தார். கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பலர் தில் நடித்திருந்தனர்.
இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் இவர்,? மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது.
சீரியல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும், மீண்டும் 2-ம் பாகம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு,ப்ரமோ வெளியானது. எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்திற்கான டீசரில், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை ஆகியோர் நடித்த நிலையில், ஜனனி கேரக்டரில் நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஜனனி கேரக்டரில், மதுமிதா ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
A post shared by ❤𝗧𝗡 𝗙𝗔𝗩𝗢𝗥𝗜𝗧𝗘 𝗦𝗘𝗥𝗜𝗔𝗟❤ (@familyserial_official)
அதேபோல் இது குறித்து அவர் தனது விளக்கத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மதுமிதாவும் தனது விலகல் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இதனிடையே அவரிடம், ரசிகர்கள் பலரும், ஏன், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில், இன்ஸ்டா லைவில் வந்த மதுமிதாவிடம், ஏன் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று ஒரு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த மதுமிதா, இது குறித்து அடுத்த லைவ்வில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
