தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல், இந்தி சினிமாவிலும் காலடி வைத்மதுள்ள நடிகை சமந்தா தனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தாலும் பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில், தற்போது தனது நிறைவேறாத ஆசை குறித்து பேசியுள்ளார்.
அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக நடிகை சமந்தா, தொடர்ந்து, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள சமந்தா, தற்போது இந்தியில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்தியில் அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு, தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்துவிட்டார். அதன்பிறகு நடிப்பில் தீவிரம் காட்டிய சமந்தா, தமிழில் கடைசியாககாத்து வாக்குல ரெண்டு காதல் என்றபடத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே ஆஸ்திரேலியாவின் சிட்னியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா, தனது நிறைவேறாத ஆசைகள் குறித்து பேசியுள்ளார். அதில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, எனது கனவாக இருந்த விஷயம், சிட்னி பல்கலைகழகத்தில் படிக்க வேண்டும் என்பது தான். நீங்கள் எப்படி இங்கு மாணவர்களாக இருக்கிறீர்களே அதேபோல் நானும் ஒரு மாணவராக இந்த பல்கலைகழகத்தில் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த கனவை என்றால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று உருக்கமாக பேசியுள்ளார்.
சமந்தா பேசிய இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு, தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
