தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தற்போது, அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் 45-வது திரைப்படம் ஆகியவற்றில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, நடிகை திரிஷா கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஸோரோ என்ற நாயை வளர்த்து வந்தார். குறிப்பாக, இந்த நாயை தனது மகன் என்றே திரிஷா அழைத்து வந்தார். இன்று (டிச 25) திரிஷா வளர்த்து வந்த இந்த நாய் திடீரென உயிரிழந்தது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார். அதில், “கிறிஸ்துமஸ் தினமான இன்று எனது மகன் ஸோரோ உயிரிழந்து விட்டான். என்னை குறித்து நன்றாக அறிந்தவர்களுக்கு, இனி என் வாழ்க்கை அர்த்தமற்றது என தெரியும். இந்த அதிர்ச்சியில் நானும், என் குடும்பத்தினரும் மனமுடைந்துள்ளோம். அனைத்து விதமான பணிகளில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
A post shared by Trish (@trishakrishnan)