kerala-logo

எம்.ஜி.ஆர் பணத்தில் ஐஸ்கிரீம்: சாப்பிட்டதை மறைத்து பொய் சொல்லி சிக்கிய பிரபல நடிகை; எம்.ஜி.ஆர் ரியாக்ஷன் என்ன?


எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கே தெரியாமல், ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடிகை லதா, பொய் சொல்லி மாட்டிக்கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த படம் நாடோடி மன்னன். இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்று, எம்.ஜி.ஆருக்கு பெரிய லாபத்தை எடுத்து கொடுத்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் மீண்டும் தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இறங்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். முதல்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கும் புதுமையாக அமைந்தது.
மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் விளம்பரம் இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லதா அடுத்து எம்.ஜி.ஆருடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஆனால் முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க நடிகை லதா தயங்கியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அவரிடம் பேசி சரி செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்றபோது, ஹோட்டல் அறையில் இருந்த லதா, ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அங்கே வர, அவருக்கு தெரியாமல் ஐஸ்கிரீமை ஒளித்து வைத்துள்ளார் லதா. அதன்பிறகு அவர் போனவுடன், ஐஸ்கிரீம் சாப்பிட்ட லதா, மறுநாள் ஒரு பாடல் காட்சிக்காக சென்றபோது, எம்.ஜி.ஆர் ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சா என்று கேட்க, நான் சாப்பிடலே இல்லையே என்று லதா கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் செல்லமாக தலையில், கொட்டி, மண்டு நான் சின்ன வயதில், நாடகத்தில் நடிக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் நீ இருக்க. நீ ஆர்டர் பண்ணா எனக்குதான் பில் வரும். என்று எம்.ஜி.ஆர் சொல்ல, லதா இனிமேல் ஆர்டர் பண்ண மாட்டேன் என்று சொல்ல, இல்லை ஆர்டர் பண்ணு என்று சொல்லி, எம.ஜி.ஆர் அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.

Kerala Lottery Result
Tops