kerala-logo

கசக்கி பிழிந்த இயக்குனர்: சளைக்காமல் பல்லவி சொன்ன கண்ணதாசன்; நிரூபர் முன்னிலையில் வந்த ஹிட் பாடல்!


கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதும் நிலையை ஒரு செய்தியாக வெளியிட வேண்டும் என்று விரும்பிய ஒரு பத்திரிக்கையாளர் முன்னிலையில், கண்ணதாசன் பாடல் எழுத அமர, அவரை பல்லவி கேட்டு கசக்கி பிழிந்துள்ளார் இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர்.
1975-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் அவன்தான் மனிதன். சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, முத்துராமன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தில் தன்னை சுற்றி நடக்கும் துரோகங்களை பற்றி கவலைப்படாத சிவாஜி கணேசன், தனது கண்ணில் பட்ட அனைவருக்கும் நன்மை செய்பவர். இப்படி செய்தே தனது அனைத்து சொத்துக்களையும் இழந்துவிடுவார்
ஒரு கட்டத்தில் ஏழையாக சொத்துக்களை இழந்து ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் இருக்கும் சிவாஜி ஒரு குடிசையில் இருக்கும்போது கிருஷ்ணர் வேடத்தில் வரும் ஒரு குழந்தையை பார்த்து பாடுவது போன்ற ஒரு பாடல். இந்த பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன் அமர்ந்துள்ளார். அவர் பாடல் எழுதும் நிலையை பார்க்க ஒரு பத்திரக்கையாளரும் அவருடன் வந்துள்ளார்.
அப்போது பாடலுக்கான சூழ்நிலையை கேட்ட கண்ணதாசன் ஒரு பல்லவி சொல்ல, இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர் இது நல்லாருக்கு, ஆனால் இதைவிட சிறப்பாக வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வேறொரு பல்லவி சொல்ல, அதற்கும் ஏ.சி.திரிலோகச்சந்தர் அதே மாதிரி சொல்ல, யோசித்த கண்ணதாசன், தான் முன்பு தேவராதத்தில் படித்த ஒரு பாடலை நினைவு கூர்ந்து ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் தான் ‘ஆட்டுவிட்டால் யாரொருவது ஆடாதாரே கண்ணா’ என்ற பாடல்.
இந்த பல்லவியை முதலில், ‘ஆட்டுவிட்டால் யாரொருவது ஆடாதாரே, அவன் செயலை அனுபவித்து காணாதாரே என்று எழுத, இதை கேட்ட ஏ.சி.திரிலோகச்சந்தர், இது நன்றாக இருக்கிறது. ஆனால் இதில் உங்கள் முத்திரை எதுவும் இல்லையே என்று சொல்ல, ஒரு பல்லவிக்கு இத்தனை மாற்றம் சொல்கிறார்கள். அதற்கும் கண்ணதாசன் சளைக்காமல் பல்லவி கொடுக்கிறாரே என்று அந்த பத்திரிக்கையாளர் யோசித்துள்ளார். ஆனாலும் இந்த பல்லவி திரும்ப திரும்ப திருத்தப்பட்டுக்கொண்டே இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் இயக்குனரின் மனதை புரிந்துகொண்ட கண்ணதாசன், கடைசியாக ‘ஆட்டுவிட்டால் யாரொருவது ஆடாதாரே கண்ணா’ ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாதே கண்ணர் என்று எழுதியுள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், காலம் கடந்து நிலைத்திருக்கிறது.

Kerala Lottery Result
Tops